Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பீகார் தேர்தல் ; ஓட்டுச்சாவடி சூறை ; துப்பாக்கி முனையில் அதிகாரிகள் கடத்தல்

பீகார் மாநிலத்தில் இன்று 2 ம் கட்ட தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட ஓட்டுப்பதிவில் பெரிய அளவில் வன்முறை ஏதும் இல்லாமல் முடிந்தது. ஆனால் இன்றை ஓட்டுப்பதிவு நடக்கும் பகுதிகள் நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதி என்பதால் பல முனை பாதுகாப்பு போடப்பட்டது. முசாப்பர்பூர், கிழக்கு சாம்பிராஸ், சித்தாமார்த்தி, தர்ரங்கா, சாம்ஸ்திபூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 45 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்கள். கடந்த வெள்ளிக்கிழமை கண்ணி வெடித்தாக்குதலில் 7 போலீசார் கொல்லப்பட்டடனர். நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதி என்பதால் ஓட்டுப்பதிவு நேரம் மாலை 3 மணிக்குள் முடித்துக்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. தேர்தலை புறக்ககணிக்க மக்களுக்கு மாவோ., நக்சல்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சித்தார்மார்தி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடிக்குள் நக்சல்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அங்கு ஓட்டுச்சீட்டுக்களை கிழித்து எறிந்தனர்., ஓட்டு மிஷினும் நொறுக்கப்பட்டன. தொடர்ந்து நொறுக்கப்பட்ட பொருட்களுக்கு தீ வைத்தனர். ஓட்டுப்பதிவு துவங்கும் சில நிமிடத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்தது. இதனால் பரபரப்பும் பதட்டமும் தொற்றிக்கொண்டது. இங்கு பணி புரிந்த 3 தேர்தல் அலுவலர்களையும் கடத்தி சென்று விட்டனர்.

கிரிமினல் வழக்கு உள்ளவர்கள் எத்தனைபேர் யார்? யார்? : கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்கள் இந்த தேர்தலில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் வருமாறு: கூடுதல் பெருமை பெறும் ராஷட்டிரிய ஜனதாதளம் கட்சியில் 40 பேர் , ஐக்கிய ஜனதாதளம் 33 பேர், பகுஜன்சமாஜ் கட்சி 29 பேர், காங்கிரஸ் கட்சி 25 பேர், பா.ஜ., 24, லோக்ஜனசக்தி 15 பேர் அடங்குவர்.

Thanks Dinamalar

Leave a Reply