Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வர்மத்தின் மர்மங்கள்

சித்தர்களால் கண்டறியப்பட்ட சித்த மருத்துவத்தில் வர்ம மருத்துவம் மாபெரும் மருத்துவமாகத் திகழ்கிறது. எல்லா மருத்துவத்திற்கும் முதன்மையானது வர்ம மருத்துவ முறையே. இந்த வர்ம மருத்துவ முறையில் உடலை பல கூறுகளாக பிரித்து வெளிப்பாகங்களையும், உள்ளுறுப்புகளையும், நரம்பு, எலும்பு, தசை, தமனி போன்ற எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாக ஆராய்ந்து அறியப்பட்ட, அதாவது பழமை பெற்ற மருத்துவ முறையாகும். இப்படி சிறப்பு வாய்ந்த மருத்துவ முறைதான் மொழி மாற்றத்திற்கு ஏற்ப வட இந்தியாவில் ஆயுர்வேதமாகவும், தென்னிந்தியாவில் சித்த மருத்துவமாகவும் விளங்குகிறது.

இத்தகைய சூழலில் வர்ம மருத்துவம் இன மொழி மாறு பாட்டினால் மறைத்து வைக்கப்பட்ட மருத்துவமாக இருந்தது. வர்ம மருத்துவம் இல்லாமல் சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள் மக்கள் மத்தியில் பரவியிருந்தது. இதனால் வர்ம மருத்துவம் புரியாத புதிராகவும் மற்றும் மறந்து போனமருத்துவமாகவும்இருந்த காலங்களும் உண்டு.

பழங்காலங்களில் மன்னர்கள் ஆண்ட நாடுகளில் வர்ம மருத்துவ சிகிச்சை முறை நிறைந்திருந்தது. போர் புரியும் போது பலவிதமான காயங்கள் ஏற்பட்டு அவதியுற்ற வீரர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக போற்றி பாதுகாத்த மருத்துவம்தான் வர்மமருத்துவம்.

மன்னர்கள் காலம் வரை வர்ம மருத்துவம் இராஜ வைத்தியமாக இருந்து வந்தது. மன்னர்கள் காலத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாக மறைக்கப்பட்ட நிலையிலிருந்தது. ஆங்கில மருத்துவம் தழைத் தோங்கியதால் வர்ம மருத்துவச் சிகிச்சை வெளியுலகத்திற்கு அறியாத வகையில் இருந்த காலமும் உண்டு.

ஆனால் அதில் ஒரு சில பரம்பரையைச் சார்ந்தவர்கள் வர்ம மருத்துவத்தை முறையாக கற்றறிந்து மருத்துவம் செய்து வந்தனர். இவர்கள் மன்னர்களின் அரண்மனையில் இராஜ வைத்தியர்களாக இருந்து வந்தனர் . இந்த வழிவந்த சிலர் வர்ம மருத்துவத்தை போற்றிப் பாதுகாத்து மக்களுக்கு உண்டாகும் புரியாத நோய்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கில மருத்துவ மோகத்தால் பல நோய்களுக்கு சிகிச்சையில்லாமல் மீண்டும் வர்ம மருத்துவத்தை நோக்கி மக்கள் மாறிவரும் நிலை வந்துள்ளது. ஏனெனில், விஞ்ஞான கருவிகளால் கண்டறிய முடியாத நோய்களுக்கு இயற்கையில் கிடைக்கும் மூலிகை மருந்துகளைக் கொண்டு நோய்களைக் குணப் படுத்தும் தன்மை வர்ம மருத்துவத்திற்கு உள்ளது .

எக்காலத்துக்கும் பொருந்தும் மாபெரும் மருத்துவம்தான் வர்ம மருத்துவம்.

காலத்தின் இடைவிடாத வளர்சிதை மாற்றத்தையும் பரிமாண வளர்ச்சியையும் உள்வாங்கி செரித்து இன்றைய நவீன மருத்துவ உலகத்தின் தவிர்க்க முடியாத தேவையாக நிமிர்ந்து நிற்பதுதான் வர்ம மருத்துவம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வர்ம மருத்துவம் ஏன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்று ஆராய்ந்தோமானால் அதற்கு பல காரணங்கள் உண்டு.

வர்ம மருத்துவம் பற்றிய ஏடுகள் சரிவர கிடைக்காமல் போனது. காரணம் ஆங்கில ஆட்சிக் காலத்தில் இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவத்தை அழிக்கும் நிலையிலும் அதிலுள்ள சிறப்புகளை அவர்கள் களவாடிச் செல்லும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதனால் ஒருசிலரிடம் மட்டுமே வர்ம மருத்துவத்தைப் பற்றிய நூல்கள் போற்றி பாதுகாக்கப்பட்டு வந்தன. தற்போது ஒருசிலர் இம்மருத்துவத்தின் சிறப்பை எண்ணி அவற்றை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் செயலாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

வர்ம மருத்துவ செய்விளக்கங்கள் சரியாக தெரியாததால் எல்லோராலும் கையாள முடியாத நிலை இருந்து வந்தது. வர்ம மருத்துவம் பற்றிய ஏடுகள் ஒருசில குறிப்பிட்ட மருத்துவர்களிடம் மட்டுமே இருந்தது. அவர்களில் சிலர் வர்ம மருத்துவத்தின் விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வருவதால் இன்றும் அதைப் போற்றி பாதுகாத்து மருத்துவச் சிகிச்சையளித்து வருகின்றனர்.

இன்றைய கால கட்டத்திற்கு வர்ம மருத்துவ சிகிச்சை முறை அவசியத் தேவையாகும். இது காலத்தின் கட்டாயம்.

தற்போது பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்து மெட்டல், மினரல் கலந்த மருந்துகளை சாப்பிட விரும்பாமல் உள்ளனர். இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகளை உண்டு அவர்களின் உடல் வலுவிழந்த நிலையில் உள்ளது.

இதனால் மக்கள் இயற்கை உணவுகளையும், மெட்டல், மினரல் கலக்காத மருந்துகளையும் உபயோகிக்க நினைத்து வர்ம மருத்துவத்தில் சிகிச்சை பெற பலர் வருகின்றனர்.

இதனால் அவர்கள் அறுவை சிகிச்சை இன்றி என்நாளும் மாத்திரை மருந்துகளுடன் வாழும் முறையிலிருந்து முற்றிலும்விடுபட்டு பூரண குணமடைந்து வருகின்றனர்.

வர்ம மருத்துவம் எந்த காலகட்டத்திற்கும் எத்தகைய நிலையிலும் மாறாத தன்மை கொண்ட மருத்துவமாகும்.

  • தொடரும்
    நன்றி நக்கீரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: