Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

200 புதிய தியேட்டர்கள் உருவாகும்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் மேலும் 200 புதிய தியேட்டர்கள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தியேட்டர்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பன்னடுக்கு திரையரங்குகளில் கூடுதல் இணைப்பாக அமைக்கப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் பிக் சினிமாஸ், பி.வி.ஆர். சினிமாஸ் மற்றும் ஐநாக்ஸ் லெய்ஷர் போன்ற நிறுவனங்கள் பன்னடுக்கு திரையரங்குகளை நிர்வகித்து வருகின்றன. இவற்றுள் பிக் சினிமாஸ் நிறுவனமே மிகப் பெரியதாகும். இந்நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் மேலும் 60 புதிய திரையரங்குகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது 263 திரையரங்குகளைக் கொண்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே 6 தியேட்டர்களுடன் செயல்பட்டு வரும் சத்யம் இப்போது கூடுதல் வசதிகளுடன் மேலும் 8 தியேட்டர்களை திறந்துள்ளது. சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு எதிரே உள்ள எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான எக்ஸ்பிரஸ் அவென்யூவில்தான் இந்த புதி்ய திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்கேப் சினிமா எனப் பெயரிடப்பட்டுள்ள இவற்றில் இரு திரையரங்குகள் தலா 300 பேர் உட்கார்ந்து படம் பார்க்கும் வசதி கொண்டவை. மற்ற 6 திரையரங்குகளிலும் தலா 120 பேர் அமர்ந்து பார்க்க முடியும். இதுகுறித்து சத்யம் சினிமாஸின் தலைவர் டான் நராங்கோ கூறுகையில், காலத்தின் அவசியம் கருதி இந்த மாதிரி சிறிய திரையரங்குகளை அதிநவீன வசதியுடன் அமைத்துள்ளோம். சத்யம் தியேட்டரில் நீங்கள் வசதியாகப் படம் பார்க்கலாம். ஆனால் எஸ்கேப் சினிமாவுக்கு வந்தால், காலை முதல் மாலை வரை பொழுதுபோக்கத் தேவையான அத்தனை அம்சங்களும் உள்ளன, என்றார்

Leave a Reply