Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எழுத்தாளர் ராய் பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்; தேசவிரோத பேச்சு; கைது செய்ய போலீஸ் திட்டம்

பிரபல எழுத்தாளர் சமூக நலவிரும்பி காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது சமீபத்திய பேச்சு தேசவிரோத குற்றமாக எழுந்துள்ளது. இந்த பேச்சின் அடிப்படையில் இவரையும் மற்றும் பிரிவினைவாத தலைவர் கிலானி ஆகியார் மீது தேசத்திற்கு எதிராக கலகமூட்டும் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்பப்படும் என தெரிகிறது.

இந்த வழக்கின்படி ( பிரிவு 124- ஏ செக்க்ஷனில்) கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை வரை வழங்கலாம் குறைந்தது 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அநுபவிக்க வேண்டியது இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக டில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் அருந்ததிராய் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார். இவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானது என அரசியல் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

டில்லி போலீசாருக்கு  இவரது பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்ய மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சில் உள்ள விரோத சர்ச்சை குறித்து டில்லி போலீசார் மத்திய சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய கிலானி மீதும் இந்தச்சட்டம் பாயவுள்ளது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். இவரது பேச்சு குறித்து தீவிரமாக பிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஒமர் கூறியுள்ளார்.

 

இது குறித்து கிலானி கூறுகையில் ஏற்கனவே என்மீது 90 வழக்குகள் உள்ளன. இத்துடன் 91 வது வழக்காக மாறும் என்றார். உயர் போலீஸ் அதிகாரிகள் மத்திய அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.

அருந்ததிராய் நான் மாவோயிஸ்ட் பக்கம் என்ற பேச்சும் கண்டனத்திற்குட்பட்ட நிலையில் இவரது காஷ்மீர் பேச்சு நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. ராய் வரலாற்று அடிப்படையில் பேசியிருக்கிறார் என ஒரு தரப்பு ஆதரவு தெரிவித்தாலும் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இவரது தேசவிரோத பேச்சை அனுமதிக்க முடியாது என செய்திதொடர்பாளர் நிர்மல் சீத்தாராமன் கூறியுள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில்; பேச்சு என்பது அடிப்படை உரிமை என்பதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் மக்களை தூண்டி நாட்டை துண்டாடும் பேச்சு அனுமதிக்க முடியாது என்றார். அரசில் ரீதியாக போலீசார் மேலிட உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

 

சட்ட அமைச்சர் மொய்லி கருத்து : அருந்ததிராய் பேச்சு துரதிருஷ்டமானது. பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தேச விரோத கருத்துக்களை கூறக்கூடாது , மக்கள் மனதை புண்படுத்தக்கூடாது. இது வரவேற்கத்தக்கதல்ல., துரதிருஷ்டமானதும் கூட. இது தொடர்பான முழு விவரங்களையும் படித்து பின்னர் தான் சட்ட ரீதியான விஷயம் குறித்து என்னால் சொல்ல முடியும் என்றார்.

 

அருந்ததி ராய் என்ன சொல்கிறார்: நான் கைது செய்யப்படுவேனா என பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நான் காஷ்மீரை பற்றி காஷ்மீர் மக்கள் தினமும் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் சொன்னேன். லட்சக்கணக்கான மக்கள் சொல்வதைத்தான் சொன்னேன். என கூறியிருக்கிறார். மேலும் காஷ்மீரில் ராணுவத்தினர் அட்டூழியம் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

 

thanks Dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: