Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கடற்படையில் இன்ஜினியரிங் தகுதிக்கான அதிகாரி நிலை பணி

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற்படையின் முக்கியப் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்தில் எழிமலாவில் அமைந்துள்ளது. இந்தியக் கப்பற் படையின் அனைத்து அதிகாரிகளும் இங்கு பயிற்சி பெற்ற பின்னரே பிற பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தியக் கடற் படையில் நிரந்தரக் கமிஷன் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்ன தேவை  ..

 

வயது வரம்பு  : 19 1/2 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உடற் தகுதி   :  குறைந்த பட்ச உயரம் 157 செ.மி.,யாகவும், இதற்கு இணையான எடை.

 

கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிகலாம். ஆனால் நிறக் கோளாறு மற்றும் மாலைக் கண் நோய் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிப்பது எப்படி

விண்ணப்பிக்கும் கவரின் மேற்பகுதியில் தவறாமல்
“Application for PC NAIC & Jul 2011 Course & Qualification : ______ Percentage : _______%”  என்று குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின் வரும் முகவரிக்கு 15.11.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி
Post Bag No.04,
RK Puram ( Main ),
New Delhi & 110 066.
இணைய தள முகவரி :
www.nausenabharti.nic.in

Leave a Reply