Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கள்ளக்காதலால் நெருக்கடிக்கு மேல் நெருக்கடி! விழி பிதுங்கும் ஹீரோ!!

நயன்தாராவுடனான கள்ளக்காதல் விவகாரம் ஒருபுறம் பிரபுதேவாவுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவரது காதல் மனைவி தனக்கு பிரபுதேவா வேண்டும் எனக் கோரி ‌கோர்ட் படி ஏறியிருப்பதுடன், சொத்து விவகாரத்தையும் கோர்ட்டுக்கு இழுத்து நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் விழிபிதுங்கி நிற்கிறார் பிரபுதேவா.

திருமணத்துக்கு முன்னரே சிறந்த தம்பதிகள்(?) விருது வாங்கும் அளவுக்கு தன்னுடன் ஒன்றாக சுற்றித் திரியும் தனது கள்ளக்காதலி நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா அறிவித்த நாள் முதல் தினம் தினம் புதுப்புது பிரச்னைகளை சந்தித்து வருகிறது பிரபு – நயன் ஜோடி. பிரபுதேவாவின் பேட்டியை கண்டு அதிர்ந்து போன ரமலத், நடிகை நயன்தாராவின் பிடியில் சிக்கி இருக்கும் பிரபுதேவாவை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும், என்று தாம்பத்ய உரிமை கோரி குடும்பநல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பிரபுதேவாவும், நயன்தாராவும் ஒன்றாக செல்வதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும், பேட்டி கொடுப்பதற்கு தடை கேட்டு மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளார் ரமலத்.

பிரபுதேவா தனது சொத்துகளை விற்கவோ, தானமாக கொடுக்கவோ, நீண்டகால குத்தகைக்கு விடவோ அனுமதிக்கக் கூடாது என்றும் ரமலத் வழக்கு தொடர்ந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பிரபுதேவாவின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த விவரத்தையும் கோர்ட்டில் ரமலத் தாக்கல் செய்திருக்கிறாராம். அவரிடம் இருக்கும் காரை கூட அவர் கணக்கில் காட்ட தவறவில்லை. ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொண்டாப்பூரில் உள்ள பாதி கட்டப்பட்ட வீடு, சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு கிரவுண்டு வீட்டுமனை, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள 22 சென்ட் நிலம், வீடு மற்றும் கட்டிடங்கள், கொடைக்கானல் செண்பகனூரில் உள்ள ஒரு ஏக்கர் 16 சென்ட் நிலம் உட்பட 8க்கும் மேற்பட்ட சொத்துகளை கோர்ட்டில் ரமலத் காட்டியிருப்பதாக அவருக்கு நெருங்கிய நண்பர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த சொத்துகள் மீது தனக்கும் உரிமை உள்ளது என்பதால் வழக்கு விசாரணை முடியும் வரை அவரோ அல்லது அவரது ஏஜெண்டுகளோ யாருமே அவற்றை விற்பதற்கோ, குத்தகைக்கு விடுவதற்கோ தடை விதிக்க வேண்டும் என்று நீதிபதிக்கு ரமலத் கோரிக்கை விடுத்துள்ளாராம். திருமண விவகாரத்தில் ஏற்கனவே நெருக்கடியை சந்தித்து வரும் பிரபுதேவாவுக்கு, அவரது சொத்து விவகாரங்களும் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்படுவதை அடுத்து மேலும் நெருக்கடி ஏற்படுத்தியிருக்கிறது.

thanks dinamalar

Leave a Reply