Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணி வாய்ப்புகள்

இந்தியாவின் இயற்கை எரிவாயுத் துறையில் கெயில் (இந்தியா) லிமிடெட்  நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னிக்களை நிரப்புவதற்கான அறிவிப்பு:
என்னென்ன பிரிவுகள்
கெயில் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 8 பிரிவுகளில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி பதவி உள்ளது.

மெக்கானிக்கல்,

எலக்ட்ரிகல்,

இன்ஸ்ட்ரூமென்டேஷன்,

கெமிக்கல்,

சிவில்,

டெலிமெட்ரி,

எச்.ஆர்., நிதி

ஆகிய 8 பிரிவுகளில் இந்தப் பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

என்ன தகுதி
குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேவைப்படும். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எச்.ஆர்., மற்றும் நிதித் துறை களுக்கு எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., போன்ற தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே முழு விபரங்களையும் அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

வயது வரம்பு
கெயில் நிறுவனத்தின் எக்சிகியூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க 30.09.2010 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
கெயில் நிறுவனத்தின் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பதவிகள் அனைத்திற்குமே எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் அல்லது நேர்காணல்  தேர்ச்சி முறை இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி
கெயில் நிறுவனத்தின் எக்சிகியூடிவ் டிரெய்னி பதவிக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதலில் ரூ.200/-க்கான டி.டி.,யை புது டில்லியில் மாற்றத்தக்கதாக “” என்ற பெயரில் எடுக்கவேண்டும். இந்த விபரங்களுடன் இந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரின்ட் அவுட், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், டி.டி., ஆகியவற்றுடன் இதர இணைப்புகளைச் சேர்த்து பின் வரும் முகவரிக்கு 06.11.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்களையும் அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி
Post Box No : 1102.
3rd Block, Jayanagar Post Office,
Bangalore  560 011.
இணைய தள முகவரி :
“www.gailonline.com”

Leave a Reply