Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என் இளமையின் ரகசியம் – தோட்டப் பராமரிப்பு

எங்கள் வீட்டை சுற்றி பெரிய தோட்டம். எனக்கு  செடி, கொடி என்றால் கொள்ளை ஆசை. பார்க்குமிடமெல்லாம் வாங்கி பயிர் பண்ணுவேன். ஆனால் என் முகத்தில் ஏமாந்த சோணகிரி என எழுதி ஒட்டியிருக்குமோ என்னமோ எல்லாவற்றையும் தானம் செய்து விடுவேன். மாமி, என் குழந்தைக்கு சளி, ஜலதோஷம், ஓமவள்ளி இலையை கொஞ்சம் பறிச்சுவா என்பாள் என் தோழியின் பெண்.
என் தலை அசைவதற்குள் இரண்ட பிடி அவள் கையில். அப்புறம் என்ன?  குழந்தைக்கு ஜல தோஷம் சரியாகிற  வரை முதல் தடவை கேட்டு விட்டதால் கேட்காமலேயே பறித்து கொள்வாள்.  கோடி விட்டு பாட்டி வேறு விதம் அம்மாடி துவாதசி. பலா இலையின் பாரøண் (சாப்பாடு) பண்ணினால் சுவர்ண பாத்திரத்தில்  சாப்பிட்ட பலனாம். என்று ஏகாதசி அன்று கேட்பாள். மாதம் இருமுறை சுவர்ண பாத்திர ஞாபகத்தில் பல இலைகள் மாயமாகும். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தினால் விசேஷம் என்று சொன்னதில் வளமாக இருந்த துளசி கன்றுகள், குச்சியாக சில இலைகளோடு பரிதாபமாக நிற்கும். இருப்பதிலேயே மருதானிக்கு தான் ஏக கிராக்கி. இட்டு கொள்ள, தலைக்கு டை ÷ பாட, தைலம் காய்ச்ச என்று எடுத்து போவார்கள். துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை விசேஷம். நான் வாசல் பக்கத்திலேயே செவ்வரளி, சில சமயம் எனக்கே கிடைக்காது போய்விடும். வாசலில் வைத்த வெற்றிலை கொடி, இலைகளை கொழுந்தாக தள்ளி நகைக்கிறதுஉ  கும்பகோணம் வெற்றிலை மெல்பவர்களுக்கு  அடிச்சது ப்ரைஸ். அதிலும் வீட்டு வேலை செய்பவர்கள், வட்சுமேன்கள் இந்த வெற்றிலை கொஞ்சம் காரம் தான்   என்ற குறையோடு தான் எடுத்து கொள்கிறார்கள்,
கொள்ளையில் மாமரம் வேறு கிளைபரத்தி நிற்கிறது. காற்றில் காய்கள் தானாக  விழுவதை என் கணவர் பொறுக்கி கொண்டு வர பைப்பையாக  சுமந்து கொண்டு போய் அக்கம்பக்கத்தினருக்கு கொடுப்பேன்.
வடு கொஞ்சம்  கசக்கிறது.  என்று முணுமுணுத்து வாங்கி கொள்வார்கள். என்ன செய்வது? எங்களால்  எல்லாவற்றையும் சாப்பிட முடியாதே. தோட்டத்துக்கு குப்பைக்கூளங்களை  சுத்தம் செய்யும்பாது என் கணவர் உனக்கு தான் வயசாச்சே. எதுக்கு கனகாம்பரமும், டிசம்பரும்? கண்ட கண்ட செடிகளை வைத்து உரமே இல்லாமல் எல்லாம் வாடிக்கிட்டு இருக்கு. எல்லாத்தையும்  வெட்டி எறி என்பார். ஆனால் வாசலில் யார் எதை வந்துகேட்டாலும் ஒரே கருணை மழைத்தான். பொறுப்பாக பறித்து கொண்டு போய் நல்ல பெயரை வாங்கி கொள்வார்.
அங்கே, இங்கே அலைந்து செடிகளை வாங்கி, காய்கறி ÷õதல், காலாவதியான மாத்திரைகள், டானிக் என ஊட்டி ஊட்டி வளர்ப்பவள் நான். ஆனால் நல்ல பெயர் அவருகு“கு . மாமா நல்லவர். மாமிக்கு தான் கொடுக்க மனசு வராது என்று என் காது படவே காமெண்ட் அடிப்பார்கள்.
எப்படியிருந்தாலும் யார் என்ன சொன்னாலும் காலையில் எழுந்து பூக்களின் அழகையும், காய்கனிகளின் வளர்ச்சியையும் பார்க்கும்போது என்னை இன்றைக்கும் இளையாகவே வைத்திருக்கிறது.

-ஜெயலெட்சுமி சேஷாத்திரி, கும்பகோணம்.

Leave a Reply