Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எழு நாட்கள்… எழு பலன்கள்…!

மனித உடலின் ஏழு சக்தி மையங்களை உள்ளடக்க , பிரதிஷ்டை செய்யப்பட்டது  ஈஷாவின் தியானலிங்கம். வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் தியானலிங்கத்திலிருந்து வெவ்வேறு அதிர்வுகள் வெளிப்படுகின்றன.

 

* திங்கட்கிழமை – பூமி தத்துவம் : குழந்தைபேறு  கிட்டவும், மலட்டு தன்மை நீங்கவும் மன பயம், பண பயம், மரண பயம் போக்கவும் இந்நாளில் தியானலிங்கத்தின் அதிர்வுகள் துணைபுரிகின்றன.
* செவ்வாய்க்கிழமை – நீர்த் தத்துவம் : மனத்தூய்மை, மனவுறுதி, உறவுகளை வளர்த்தல் போன்றவற்றுக்கு இந்நாளில் அதிர்வுகள் துணைபுரிகின்றன.
புதன்கிழமை – நெருப்புத் தத்துவம் : பொருளாதார மேம்பாட்டுக்கும், உடல் நலம் சிறக்கவும் துணை செய்கிறது.
வியாழக்கிழமை – காற்றுத் தத்துவம்: பொருளாதார மேம்பாட்டுக்கும், உடல் நலம் சிறக்கவும் துணை செய்கிறது
* வியாழக்கிழமை – காற்றுத்தத்துவம் : இறையுணர்வில் தேடல் மிகுந்தவர்களுக்கு அன்பு நிலை, பக்திநெறி போன்ற மேம்பட்ட வாழ்க்கை முறைகளுக்கு பேருதவி புரிகிறது
* வெள்ளிக்கிழமை – வான் தத்துவம் : நினைவாற்றல், தன்னம்பிக்கை, பொறுமை போன்ற நற்பண்புகள் மேம்படவும், சாபங்கள்  மற்றும் தீய சக்திகளிடமிருந்து   விடுபடவும்
* சனிக்கிழமை – மகா தத்துவம் : ஐம்புலன்களை கடந்த பேரானந்தம் கிட்டுவதற்கு வழி செய்யவும் அதிர்வலைகள் இந்நாளில் தியானலிங்கத்திலிருந்து வெளிப்படுகின்றன.
*  ஞாயிற்றுக்கிழமை: தான் எனும் மாயையை கடப்பதற்கும், புலன்களுக்கு அப்பாற்றபட்ட பேரானந்தத்தை உணர்வதற்கும் இந்தநாளில் தியானலிங்கம் நல்வழி காட்டுகிறது
– சரவணன்திரு,  கல்கி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: