Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

`கிரெடிட் கார்டு’ வ‌ரலாறு

முன்பு ஒரு காலத்தில் பண்டமாற்று முறைக்குப் பின் மனிதர்கள் பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு வியாபாரிக்கும், வாடிக்கையாளருக்கும் கடன் என்பது தனிப்பட்ட முறையிலான பழக்கமாக இருந்தது. 1920-ல் முதன்முதலில் சில பெட்ரோல் நிலையங்களும், பல கிளைகளைக் கொண்ட ஓட்டல்களும் தங்கள் கிளைகளில் பயன்படுத்தத்தக்க வகையில் கடனுக்கான கார்டுகளை வெளியிட்டன.

1930-களின் இறுதியில் இவற்றில் சில, மற்றவர்களின் கார்டுகளையும் அங்கீகரிக்கத் தொடங்கின. பிறகு 1950-ல் டைனர்ஸ் கிளப்’, பணம் கொடுத்துப் பெறும் கார்டுகளை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல நிறுவனங்களில் செல்லக்கூடியவையாக அறிமுகப்படுத்தினர். விரைவிலேயேஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ்’ அதேபோல செய்தது. பாங்க் அமெரிகார்டு’ என்பதே பின்னர்விசா’ கார்டு என்றானது. 1959-ல் அது முதல் பாங்க் கிரெடிட் கார்டாக வெளிவந்தது. அதைத் தொடர்ந்து 1966-ல் `மாஸ்டர் கார்டு’ வெளிவந்தது.

One Comment

  • GANESH

    கிரெடிட் கார்டு சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் அதிகமாகப் பயன்படுத்தி அவஸ்தைப் பட்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். அதன் தோற்றுவாயை இன்று உங்கள் மூலம் அறிந்தேன். நன்றி.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: