கன்னக்குழி சிரிப்பின் மூலமும் தனது துடுக்குத்தனமான நடிப்பு மூலமும், சிறிய கண்களின் வெளிப்படும் அந்த அப்பாவித்தனமான பார்வையின் மூலமும் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை லைலா திருமணத்துக்குப் பின் சினிமா உலகில் இருந்து விலகி, ஒரு நல்ல குடும்பத்தலைவியாக மும்பைக்கு சென்றுவிட்டார். பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்திருக்கும் லைலா, இன்னமும் பாலாவிடம் தொடர்பில்தான் இருக்கிறாராம். சமீபத்தில் லைலாவை தொடர்பு கொண்ட தயாரிப்பாளர் ஒருவர், தான் தயாரிக்கவிருக்கும் சின்னத்திரை சீரியலில் நடிக்க வருமாறு அழைத்துள்ளார். சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் விசாரித்த லைலா, அப்புறமா கன்பார்ம் பண்றேன் என்று சொல்லி போனை வைத்து விட்டார். அதன் பிறகு இப்படியொரு சின்னத்திரை வாய்ப்பு வந்திருக்கு. பண்ணட்டுமா? என்று டைரக்டர் பாலாவிடம் கருத்து கேட்ட அம்மணிக்கு, பாலா பெரிய தடை போட்டு விட்டாராம். தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் உனக்கு நல்ல, பேசப்படும்படியான கேரக்டர் வெச்சிருக்கேன். அதுக்குள்ளே டி.வி.,க்கு போகணும்னு அவசரப்படுறியே? என்று கேட்டுள்ளார் பாலா. அடுத்த நொடியே சின்னத்திரை சீரியல் தயாரிப்புக்கு போன் பண்ணிய லைலா, சீரியல்ல நான் நடிக்கவில்லைன்னு சொல்லிவிட்டாராம்.