கர்நாடகத்தில் பா.ஜனதா அரசுக்கு எதிராக செயல்பட்ட 11 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்ட வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் 11 பேரின் பதவி நீக்கம் செல்லும் என்று 3-வது நீதிபதி சபாஹித் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.