சீனாவில் உபயோகித்த சிகரெட் துண்டுகளை சேகரித்து கொடுத்தால் பணம் பரிசாக அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வீணாக கீழே கிடக்கும் சிகரெட் துண்டுகளால் பலவிதமான தீமைகள் ஏற்படுவதனுடன் நகரம் மாசு அடைகிறது. இதனை தடுக்கவே இந்த அறிவிப்பை அந்நாட்டு அரசு விடுத்துள்ளது. இதுவரை 7 மில்லியன் சிகரெட் துண்டுகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நகரம் சுத்தமாகவும், நாகரிகமாகவும் மாறிவிடும் என்பது அந்நாட்டு அரசின் குறிக்கோளாகும்.
மேலும் இதன்மூலம் சிகரெட் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒருவர் மட்டும் 7,500 சிகரெட் துண்டுகளை கொடுத்துள்ளார். மேலும் பலர் அரசிடமிருந்து வெகுமதி பெறுவதற்காக ரெஸ்டாரண்ட் மற்றும் குப்பை தொட்டிகளிலிருந்தும் பயன்படுத்திய சிகரெட் துண்டுகளை கொண்டுவந்து ஒப்படைப்பது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளது.
thanks thalam
Good stuff mate. Please visit my website. It may be interesting to you