சமீபத்தில் விளம்பர பட சூட்டிங் ஒன்றிற்காக பாங்காக் சென்றிருந்த பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்பை ரசிகர் பட்டாளம் சுற்றிக் கொண்டனர். அவர்களிடம் இருந்து கத்ரினாவை பத்திரமாக மீட்டு வருவதற்குள் போலீசாருக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அதன் பிறகு பாங்காங்கில் ஒரு கடைக்கு சென்றுள்ளார். அது வெளிநாடு என்பதால் தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்க மாட்டார்கள், தனியாரக ஷாப்பிங் செய்து விட்டு வரலாம் என கத்ரினா நினைத்துள்ளார். ஆனால் ஹோட்டலுக்கு செல்ல கடையை விட்டு வந்த கத்ரினாவுக்கு இன்ப அதிர்ச்சி. அங்கு கத்ரினாவிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது. வெளிநாடுகளிலும் தனக்கு ரசிகர்கள் இருப்பதை பார்த்த கத்ரினா மகிழ்ச்சியின் உச்சத்தி்ற்கே சென்று விட்டார். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அவ்வளவு ரசிகர்கள் கூட்டம். பின்னர் பாதுகாப்பிற்கு வந்த போலீசாரும், கடை ஊழியர்களும் சேர்ந்த ஒருவழியாக கத்ரினாவை ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.