சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள நாதமேட்டில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர்.,க்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது.
எந்த அரசியல் கட்சியின் பங்கேற்பும் இன்றி இக்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. கவிஞர் காசி முத்துமாணிக்கம் மற்றும் இதயக்கனி எஸ்.விஜயன் ஆகியோர் இக்கோயிலின் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இந்த பூமி பூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கலைவாணன், அவரது மனைவி சாந்தி, திருவேர்காடு சகாதேவன், விருகை மகாதேவன், கோவை துரைசாமி, திருவண்ணாமலை கலீல் பாஷா, கலைவேந்தன் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான எம்.ஜி.ஆர்., ரசிகர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.