Monday, November 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பை போலீசார், போர்ஸ் ஒன் படையினர் மற்றும் குவிக் ரெஸ்பார்ன்ஸ் படையினர் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். மெரைன் டிரைவ் டிரைடன்ட் ஓட்டல் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு, ‌தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் முடிவடைகிறது.

போரிவிலி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செஞத்தினார்.

மும்பையில் 2008 நவம்பர் 26-ல் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்திய கமாண்டோப்படையினர் அதிரடியாக செயல்பட்டதில் பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன், கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெறும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்கிறார். தாக்குதல் நடைபெற்ற சிஎஸ்டி ரயில் நிலையத்திலும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சியும், அமைதி ஊர்வலங்களும் நடைபெற உள்ளன.

பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், மும்பை தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்தினரின் துக்கத்தில் தேசம் முழுவதும் பங்கேற்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மும்பை மக்களின் ஒற்றுமையையும், தாக்குதலுக்குப் பிறகு வீரத்துடன் எழுச்சி கண்ட திடத்தையும் ‌பெரிதும் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

thanks dinamalar

0 Comments

  • I am so happy to read this. This is the kind of info that needs to be given and not the random misinformation that is at the other blogs. Appreciate your sharing this beneficial content.

Leave a Reply