மும்பை தாக்குதல் நடந்த 2வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கேட்வே ஆப் இந்தியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவான், தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் என்ற சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். இச்செயல் தேசிய கீதத்தை அவமித்த செயல் என்றுகூறி பா.ஜ.க.வினர் தங்களது எதிர்ப்பினை
தெரிவித்தனர். இதுகுறித்து பிருதிவிராஜ் சவான் அளித்துள்ள விளக்கத்தில், நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது தனக்கு கேட்கவில்லை என்றும், தேசியகீதம் கேட்டவுடன் நான் அந்த இடத்திலேயே நின்று விட்டதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் பிருதிவிராஜ் சவான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன•