Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாராளுமன்ற இரு அவைகளும் நடக்காததால், தினப்படி வழங்க வேண்டாம் என்று : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 78 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, “பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை’ என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், நேற்று லோக்சபா துவங்கியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் வரும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதில் தன்னால் முடிவு காண முடியவில்லை என்று பிரணாப் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முட்டுக்கட்டை நிலைக்கு அரசு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு உள்ளதால், ரூ.78 கோடி அளவுக்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தினப்படி வேண்டாம்: பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வரும் சூழ்நிலையில், எம்.பி.,க்களுக்கு தினப்படியாக ரூ.2,000 வரை அரசு வழங்கி வருகிறது. அலுவல்கள் எதுவும் நடக்காமலேயே இந்த பணத்தை வாங்கினால், பொது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படும் என கருதி, நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸ் எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகருக்கும், ராஜ்யசபா தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஒவ்வொரு எம்.பி.,யும் தனித்தனியாக எழுதியுள்ள அந்த கடிதத்தில் தங்களுக்கு தினப்படி வேண்டாமென குறிப்பிட்டுள்ளனர். காங்கிரசுக்கு இரு சபைகளிலும் 278 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தினப்படி வாங்கவில்லை என்றால், தினமும், ஐந்து லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வரை அரசுப் பணம் சேமிக்கப்படும்.

இதுகுறித்து பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது: கடந்த 10ம் தேதியில் இருந்து, பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடியும் வரை, தங்களது தினப்படியை வாங்குவது இல்லை என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். இது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவு. வேலை செய்யாமல், சம்பளம் வாங்குவது இல்லை என்ற நடைமுறையை பின்பற்றி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பவன்குமார் பன்சால் கூறினார்.

பா.ஜ., கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் எம்.பி.,க்களின் இந்த முடிவை, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: தினப்படி வாங்குவது இல்லை என்ற காங்கிரஸ் எம்.பி.,க்களின் அறிவிப்பு, ஊழல் பிரச்னையை திசைதிருப்பும் செயல். ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தை திசை திருப்பும்வகையில், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இருந்தாலும், பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாதவரை, எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும், என்றார்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரும், லோக்சபா அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி கூறுகையில்,” பார்லிமென்ட் நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்க பட்டுவருவது துரதிர்ஷ்டவசமானது. எந்த பிரச்னையிலும் விவாதத்துக்கு தயார் என, அரசு சார்பில் அறிவிக்க பட்டுள்ளது. இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண,  நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

தலைசுற்றும் கணக்கு: காங்கிரஸ் எம்.பி.,க்கள் 278 பேரின், ஒரு நாள் தினப்படி 5.56 லட்சம். ஒரு ஆண்டுக்கு சராசரியாக 150 நாட்கள் பார்லிமென்ட் நடப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஆண்டுக்கு, காங்., எம்.பி.,க்களுக்கான தினப்படி தொகை 8.34 கோடியாகிறது. தற்போது தினப்படி வேண்டாம் என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர். இதன்மூலம், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் 1.76 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க நினைத்தால், அதை சேமிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை கணக்கிடுவது மிகவும் கடினம்.

thanks dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: