கைபேசி அதாவது செல்போன் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நமது இரண்டு கைகளோடு மூன்றாவது கையாக செல்போன் மாறிவிட்டது. இதனால் நன்மைகள் பல இருந்தாலும் சில தொல்லைகளும் உண்டு
செல்போன் வாடிக்கையாளர்களான நம்மில் பலரையும் ஏன் எல்லோரையும் புலம்ப வைக்கும் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் தான். பயனாளர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார். எந்த நிலையில் இருக்கிறார் என்றெல்லாம் பார்க்காமல் நேரம், காலம் இன்றிவரும் இந்த தேவையற்ற அழைப்புகளால் மிகுந்த எரிச்சலுக்கு ஆளாகும் வாடிக்கையாளர்களுக்கு ஓரு நல்ல செய்தி, இதுபோன்ற அழைப்புக்களை தடுத்து நமக்கு நிம்மதியை தரும் திட்டம்தான். எதிர் வரும் 2011 ஜனவரி மாதம் முதல் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் அனைத்தும் 700 என்ற துவக்க எண்கள் கொண்ட எண்களில் இருந்தே அமையும். இதனால் வாடிக்கையாளர்கள் அந்த அழைப்புகளை ஏற்பதா? அல்லது புறக்கப்பதா? என்பதை வாடிக்கையாளர்களை முடிவு செய்யலாம். இதேபோல் ஏற்கனவே அமலில் இருக்கும் நேஷனல் டூ நாட் கால் டைரக்டரியிலும் சில மேம்படுத்தப்பட்ட மாறுதல்கள் செய்யப்படுகின்றன. தற்போது நடைமுறையில் என்.டி.என்.சி.,யில் பதிவு செய்து 45 நாட்களுக்குப் பிறகு தேவையற்ற அழைப்புகள், குறுஞ்செய்தி அதாவது எஸ்.எம்.எஸ்.கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் புதிய நடைமுறையின்கீழ் வரும் இது பதிவு செய்த 7வது நாளிலேயே தேவையற்ற அழைப்புகள், மெசேஜூகளை தடை செய்ய முடியும். மேலும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்.டி.என்.சி., டைரக்டரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எண்களுக்கு விதிமுறையை மீறி அழைப்புகள் விடுத்தால், முதலில் வரும் 5 அத்துமீறல்களுக்கு அபராதமும், ஆறாவது முறையாக அத்துமீறல் நடந்தால் எந்த எண்ணில் இருந்து அழைப்பு விடுக்கப்படுட்டதோ, அந்த எண்ணின் சேவை துண்டிக்கப்படும்.