Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்கிலீக்ஸ் இணையதளம் பகிரங்கமாக, ரகசிய ஆவணங்கள் வெளியிட்டது: அலறும் அமெரிக்கா;

அமெரிக்காவின் அந்தரங்க ரகசியங்களை கண்காணித்து இந்த நாட்டின் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட விஷயங்கள் என்ன, என்ன என்பதை விலாவாரியா புட்டு, புட்டு வைத்திருக்கிறது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் , தோழமை நாடுகளுடனான நட்புறவில் பிளவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈராக் போர் தொடர்பான ஆவணங்களை இந்த விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 2 லட்சத்து 51 ஆயிரத்து 287 ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் வெள்ளை மாளிகையுடன் என்ன, என்ன விவரம் தொடர்பு கொள்ளப்பட்டது. என்றும் சீனா, பிரிட்டன் ரஷ்யா , இந்தியா, ஆப்கன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் தொடர்பான ஆவணங்கள் முக்கியமானது ஆகும். இந்த ஆவணஙகளில் சில விவரம் வருமாறு:

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுக்கு அல்பாடாக் என சங்கேத வார்த்தை பயன்படுத்தப்பட் விஷயங்கர் பரிமாறப்பட்டுள்ளது. ஆப்கன் துணை பிரதமர் ஒருவர் அமெரிக்க டாலருடன் சவுதியில் பிடிபட்ட போது அவரை அமெரிக்கா விடுதலை செய்ய பெரும் ஆர்வம் காட்டியது. பாகிஸ்தானில் அணு ஆயுதம் ஆபத்தை விளைவிக்கும் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் எடுத்தும் இதற்கு பாக்., செவி சாய்க்கவில்லை.

இது அமெரிக்காவிற்கு பெரும் தோல்வியாக கருதப்படுகிறது. சீனாவில் கூகுள் இணையதளத்தை செயல்படவிடாமல் இருக்க அமெரிக்கா உள்வேலை பார்த்திருப்பதும், தலாய்லாமா கம்ப்யூட்டர் செயல்படாமல் போக உரிய வேலை பார்த்த விவரமும் தெரிய வந்திருக்கிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த சவுதி மன்னர் ஆர்வம் காட்டியதாகவும், இதற்கு அமெரிக்கா பெரும் முயற்சியில் இறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து சென்ற ஆவணஙகள் மொத்தம் 3 ஆயிரத்து 38 என்றும் இது தொடர்பான விவரங்கள் வெளியிடுவதில் டெக்னிக்கல் கோளாறு காரணமாக இன்னும் வெளிவராமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ரகசியங்கள் இருப்பதால் இந்தியா விஷயங்கள் நாளை, அல்லது நாளை மறுநாள் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்., அணு ஆயுதங்கள் குறித்து இங்கிலாந்து, அமெரிக்காநாடுகள் அச்சம் அடைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், ஒருங்கிணைந்த கொரி<யா மீது தாக்குதல் நடத்தகோரி தென்கொரியா கூறியதாகவும்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி ராஜதந்திர பயணமாக மத்திய ஆசிய நாடுகள் மற்றும் பெர்சியன் வளைகுடா பயணம் மேற்கொள்ளவிருப்பது தெரியவந்துள்ளது. கஜகஸ்தானில் நாளை மறுநாள் நடைபெறும் 56 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அமெரிக்க ஐரோப்ப பாதுகாப்பு அமைப்பு கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். கஜகஸ்தான் பயணத்தின் போது, ஆப்கானில் உள்ள அமெரிக்க படைகளை அனுப்புவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

விக்கலீக்சின் இந்த ரகசிய ஆவணஙகள் வெளியீடு அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது. இதனை வெளியிட வேண்டாம் என பல முறை எச்சரித்தும் இந்நிறுவன ஜூலியன் அசேஞ்ச் பொருட்படுத்தவில்லை.

சர்வதேச தலைவர்களும் பட்டப்பெயர்களும் : அமெரிக்க தூதரக வட்டாரத்தில் சர்வதேச தலைவர்களுக்கு பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டதும், பட்டப‌‌்பெயர் விபரமும் விக்கிலீக்ஸ் அம்பலமாக்கியுள்ளது. அதன்படி பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஆடைகள் இல்லாத பேரரசர் என பெயரிடப்பட்டுள்ளதாம். இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு பட்டப்பெயர் வலிமையற்ற, செயல்திறனற்ற ஐரோப்பிய தலைவர். ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவுக்கு புடினின் கையாள் என்றும் புடினுக்கு ஆல்பா டாக் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாதுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் ஹிட்லர். வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் -இல் மனவலிமையற்ற வயதானவர் என அழைக்கப்படுகிறார்.

thanks dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: