காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது தொகுதியான ரேபரேலிக்கு மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக 29ம் தேதியான நேற்று சென்றார். இன்று அவர் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்திதையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த அண்ணன் தங்கை இருவரும், சோனியா காந்தியின் வாகனத்துக்கு வழிவிடுவதற்காக சாலையோரத்தில் ஒதுங்கியபோது தீடிரென எதிர்பாராத விதமாக அண்ணன் தங்கை இருவருக்கும் விபத்து ஏற்பட்டு காயமுற்றனர். இதனையறிந்த சோனியா காந்தி சற்றும் தாமதிக்காமல் தான் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்த சொல்லி அங்கே விபத்தில் காயமடைந்த அண்ணன் தங்கை இருவருக்கும் உதவி செய்ய தனது பாதுகாவலர்களுக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவரது பாதுகாவலர்களும், காயமடைந்தவர்களுக்கு முதலிதவி சிகிச்சை அளித்து முடிக்கும் வரை சோனியா காந்தி அதே இடத்தில் காந்திருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, பின், தான் வந்த வாகனத்தில் ஏறிச் சென்றார்.