Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூமியின் கதை

ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பூமி தோன்றியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

துவக்கத்தில் சூரிய மண்டலத்தில் பூமி ஒரு உருகிய தீக்கோளமாக இருந்தது. அதைச்சுற்றி கரியமில வாயுவும், அண்டவெளியிலிருந்த வேறு பல வாயுக்களும் சேர்ந்த காற்று மண்டலம் இருந்தது. அப்போது உருகிய பாறைகள் வழிந்தோடிய பூமியின் மேற்பரப்பை விண்கற்கள் தாக்கிய வண்ணமிருந்தன• பூமியை விட்டு வெளியேறிய நீராவியும், மற்ற வாயுக்களும் கரிய மேகங்களாகக் கவிய சூரிய ஒளியற்ற பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சி அடைந்தது. நீராவியாக நின்ற மேகக் கூட்டங்கள் இடைவிடாமல் மழையகப் பொய்த்தன• உருகிய பாறைகள் கொண்ட சூடான பூமியின் மேற்பரப்பில் விழுந்த மழை நீர், மீண்டும் நீராவியாக மாறி, மேகக் கூட்டங்களாகச்சென்று மறுபடியும் பெருமழையாக இடைவிடாது பெய்ய, பூமி குளிர்ந்தது. நீர் நிலைகள் பெருகின• பின்னர் சூரியன், காற்று, நீர் போன்றவற்றாலும், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, கண்டங்களின் பெயர்ச்சி, மடிப்பு மலைகள் உருவாதல் போன்றவற்றாலும் இன்றைய பூமியின் பரப்பு, மலைகள், மடுக்கள், குளங்கள், குட்டைகள், ஓடைகள், ஆறுகள், பரந்த கடல்கள், பனிப்பரப்புகள், பாலைவனங்கள் என உருமாறியது. இது பூமியின் சுருக்க வரலாறு.

உயிரினங்களின் தோற்றம்:

பூமியின் வரலாறு ரிவாசு நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. அவை முதல் கால கட்டமான கேம்பிரியனுக்கு முற்ப்ட்ட காலக்க‌ட்டம். அடுத்து எந்த போலியோஸோபிக், மிஸோஸோயிக், கெயினோஸோயிக் காலக்கட்டங்கள்.

கேம்பிரியனுக்கு முற்பட்ட சகாப்தம்:

இன்றைக்கு முன் (இ.மு) 700 கோடி – 500 கோடி) இந்த சகாப்தம் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது (சுமார் 450 கோடி) இன்றைக்கு சுமார் 250 கோடி) ஆண்டுகளுக்கு முற்பட்ட காலக்கட்ட மஸோஸிக் கால கட்டம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு பின் இன்றைக்கு 150 கோடி ஆண்டுகளுக்கு முன் பாக்டீரியா, பாசிகள் போன்ற உயிரினங்கள் தோன்றி வாழ்ந்த காலக்கட்டம் ஆர்கியோஸோயிக் என்றும் புழு, கடற்பஞ்சு, நுங்குமீன் போன்றவை உருவான காலக்கட்டம் புரோட்டிரோஸோயிக் காலக்கட்டம் என்றும் அழைக்கப்படுகின்றன•

போலியோஸோயிக் சகாப்தம்:

தொன்மையான உயிரினங்களின் சகாப்தமான போலியோஸோயிக், மூன்று காலக்கட்டங்கள் கொண்ட கீழ் போலியோஸோயிக் என்றும் மூன்று காலக்கட்டங்கள் கொண்ட மேல் போலியோயிக் என்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது.

(கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைத்தேன்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: