நாயுடன் திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஜோசப் கைஸோ. இவர் லாப்ரடார் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்தார். எந்த சூழ்நிலையிலும் அவர் நாயைவிட்டு பிரியாமல் இருந்தார். இந்நிலையில் அவருக்கு வினோத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனக்கு பிரியமான நாயையே திருமணம் செய்து கொள்வது என்று .அதற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினார். திருமணவிழா ஆஸ்திரேலியாவின் லாரல் பேங்க் பார்க் என்ற இடத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடைபெற்றது. விழாவிற்கு நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றனர்.
செய்தி – தினமலர், / படத்தொகுப்பு விதை2விருட்சம்