“ஸ்பெக்ட்ரம் 3ஜி’ ஒதுக்கீட்டுக்காக பெற்ற 18 ஆயிரத்து 500 கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும்; மொபைல் சேவைக்கு நவீன கருவிகள் வாங்கித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், கடந்த இரு தினங்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தொலைத் தொடர்பு பணிகள் அனைத்தும் சம்பித்து போய் இருந்தன• இந்நிலையில் பி.எஸ்.என்.எல்., சேர்மன் கோபால்தாஸ், தொலைத் தொடர்புத்துறை செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தை வெற்றி பெற்று, சுமுக முடிவு எட்டப்பட்டதால், ஊழியர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் உறுதி அளித்தது. இதையடுத்து “ஸ்டிரைக்’ வாபஸ் பெறப்பட்டு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவர் என்றும், பாதிக்கப்பட்ட பணிகள் சரி செய்யப்படும் என்றும் பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.