Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்கிலீக்ஸ் வெளியிட்ட‌ இலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து . . .

உலகில் உள்ள அனைத்து மக்களையும் அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கை போர்குற்றம் பற்றிய தகவல்களை இறுதியாக வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய 7 மாதங்கள் போரில் லட்சக்கணக்காற மக்கள் கொல்லப்பட்டு ள்ளார்கள். ஏதும் அறியாத அப்பாவி மக்களை படுகொலை செய்த காட்சிகளும், போரின் போது சரணடைந்தவர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளும் காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் துயரத்திலும், இலங்கை அரசு மீது கோபமும் ஏற்பட்டது• இருப்பினும் இத்தகவலை இலங்கை ராணுவமும், அரசாங்கமும் போலியாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் கற்பனை கதை என்றும் கூறி சப்பை கட்டு கட்டி வந்த நிலையில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதியில் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதரகம் அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்று அனுப்பியது.

அச்செய்தியில் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது போர் குற்றங்கள் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் அதில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, மற்றும் அப்போதைய ராணுவ தளபதி சரத்பொன்சேகா ஆகிய இருவரும் போர்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிய‌தால் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, பிரிட்டன் சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜ பக்ஷேவுக்கு அதிக‌ நெருக்கடி உண்டானது. மேலும் இலங்கை தமிழர்கள், ராஜபக்ஷேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் பல நடத்தினர். அவரை கைது செய்யவும் கோரினர். இதன் காரணமாகவே, அவர் கைது செய்யப்படுவதாக பரபரப்பு வெளியானது. இந்தநேரத்தில்  தன் மீதான கைது நடவடிக்கை ஏதும் இல்லை என பிரிட்டன் உறுதிமொழி அளித்த‌தால் ராஜபக்ஷே கைது நடவடிக்கையிலிருந்து தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. மேலும் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன•

இதன் தொடர்புடைய புதிய செய்திக்ளுக்கு .  . .

0 Comments

Leave a Reply