Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விண்டோஸ் வேகமாக இயங்க . . . .

நம்மில் 90% பேர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறோம் என்பது, பன்னாட்டளவில் அறியப்பட்ட உண்மை. அதன் இயக்கம், அதனுடன் நமக்கேற்பட்ட பழக்கம் அவ்வாறான ஓர் இடத்தை அதற்கு அளித்திருக்கிறது. விண்டோஸ் இயக்கத்தை இன்னும் வேகமாக இயக்கி, திறன்களை எளிதாகப் பெற இங்கு டிப்ஸ்கள் தரப்படுகின்றன.

1.மினிமைஸ்: பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குகையில், பல விண்டோஸ்கள் திறக்கப்படும். இவை அனைத்தையும், திரையில் திறந்து வைத்தவாறே இயக்க வேண்டாம். எந்த விண்டோவில் பணியாற்று கிறீர்களோ, அதனை மட்டும் திறந்து வைக்கவும். மற்றவற்றை மினிமைஸ் செய்து வைக்கவும்.

2. இமெயில் போல்டர்: இமெயில் கிளையண்ட் எதுவானாலும், மொத்தமாக அவற்றை ஒரே இன்பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதிலும் போல்டர்களை ஏற்படுத்தி, மெயில்களைப் பிரித்து வைக்கவும். அவ்வப்போது படித்து, முக்கியத்துவம் இழந்த மெயில்களை நீக்கவும்.

3. சரியான பயன்பாடு: போல்டர்களுக்குச் சரியான பெயர் கொடுத்து, மெயில்களைப் பொருள் வாரியாகப் பிரிக்கவும். ஒரே போல்டரில், அதிக மெயில்களைத் தேக்குவது போல்டர்கள் அமைத்த நோக்கத்தை செயல்படுத்தாது.

4. அப்புறம் பார்க்கலாம்: பின் நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் பல மெயில்கள் வரும். இவற்றிற்கென ஒரு போல்டரை உருவாக்கி அதில் போட்டு வைத்து, நேரம் கிடைக்கும்போது கண்டறிந்து, நீக்கவும்.

5. பிரவுசரின் தேடல் சாதனம்: உங்களுக்கென விருப்பமான தேடல் சாதனத்தினை, மாறா நிலைக்கு (டிபால்ட்) தேர்ந்தெடுத்து அமைக்கவும். இல்லையெனில், லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், சிஸ்டம் அமைத்த சர்ச் இஞ்சினும் , நீங்கள் பயன்படுத்த இன்னொன்றுமாய் கிடைக்கும்.

6.பைல் பெயர் மாற்றம்: பைல்களின் பெயர்களை மாற்ற விரும்புகிறீர்களா? நிறைய பைல்கள் மாற்றப்பட வேண்டுமா? முதல் பைலைத் தேர்ந்தெடுக்கவும். எப்2 அழுத்தவும். புதிய பெயரை டைப் செய்திடவும். இனி, என்டர் அழுத்தாமல், டேப் கீ அழுத்தவும். எக்ஸ்புளோரர் உங்களை அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லும். அந்த பைலின் பெயர் தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாற்றத்திற்குத் தயாராய் இருக்கும். பேக் ஸ்பேஸ் கீயெல்லாம் அழுத்த வேண்டாம்.

7. இமெயில் செக்கிங்: அடிக்கடி உங்கள் இமெயில்களை செக் செய்து பெறும்படி அமைக்க வேண்டாம். இதனால், உங்கள் வழக்கமான கம்ப்யூட்டர் பணியில் தேவையற்ற குறுக்கீடு இருக்கும். எனவே எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திட வேண்டும் என்பதனை, இதன் அடிப்படையில் அமைக்கவும்.

8. பல பைல் தேர்ந்தெடுக்கும் எளிய வழி: ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் தேர்ந்தெடுக்கிறீர்களா? கண்ட்ரோல் அல்லது ஷிப்ட் கீயை அழுத்தித் தான் பலரும் இந்த செயலை மேற்கொள்கிறோம். இதனால் சில வேளைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. இதற்கு மாற்றான வழி ஒன்றும் உள்ளது.  முதலில் Organize>Folder and search options>View என்று செல்லுங்கள். பின்னர் கீழாகச் சென்று Use check boxes to select items என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.  இதன் மூலம் டிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

9. ஸ்பேம் நீக்கவும்: உங்களுடைய கம்ப்யூட்டரில் ஸ்பேம் மெயில்களை வடிகட்டுவதற்கென புரோகிராம் இல்லை எனில், உடனடியாக ஒன்றை இன்ஸ்டால் செய்திடவும்.

10. விண்டோஸ் 7 கால்குலேட்டர்: விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளில் கால்குலேட்டர்கள் இணைந்தே தரப்பட்டன. ஆனால் சில சிறப்பான கால்குலேட்டர் செயல்பாடுகளுக்கு, இணைய தளங்கள் தரும் இலவச கால்குலேட்டர் புரோகிராம்களை பதிந்து பயன்படுத்தினோம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், வேறு ஒரு புரோகிராமிற்குச் செல்ல வேண்டியதில்லை. இதில் கிடைக்கும் கால்குலேட்டர் மிகச் சிறப்பானதாகப் பல செயல்பாடுகளைத் தாங்கி உள்ளதாக அமைந்துள்ளது.

11. பிரச்னை பதிவு: விண்டோஸ் இயக்கத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு, உங்கள் டெக்னீஷியனை அடிக்கடி அழைத்து, பிரச்னைகள் குறித்து நிறைய விளக்கம் தர வேண்டியுள்ளதா? நீங்கள் சொல்வது அவருக்கும், அவர் கேட்பது உங்களுக்கும் புரியாமல், பல தொலைபேசி அழைப்புகளை   வீணாக்குகிறீர்களா? இது தேவையே இல்லை.  Windows’ Problem Steps Recorder  என்பதை இயக்கினால் போதும். வரிசையாக, ஒவ்வொரு ஸ்டெப் ஆக, என்ன நடை பெற்றது என்று உங்களுக்கு இது காட்டும். இதனைப் பெற PSR  என ஸ்டார்ட் மெனு சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். மிக விலாவாரியாக, ஸ்கிரீன் ஷாட்களுடன் உங்கள் பிரச்னைகளை இதில் காணலாம்.

12. திரை இடம் பெரிதாக: டாஸ்க்பார் ஐகான் பெரிதாக அமைந்து, மானிட்டர் திரையில், நீங்கள் இயங்கும் இடம் சுருங்குகிறதா? டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து Properties > Use small icons  என அமைக்கவும்.  இதன் மூலம் அனைத்து ஐகான்களும் பாதியாக அதன் அளவில் குறையும். நீங்கள் இயங்க அதிக இடம் கிடைக்கும்.

13. சிறிய, பெரிய எழுத்துக்கள்: எழுத்துக்களை அமைத்துவிட்டு, அதனை முழுமையாகப் பெரிய எழுத்துக்கள் அல்லது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக அமைக்க வேண்டுமா? ஒவ்வொரு எழுத்தாகத் தேடிச் சென்று மாற்ற வேண்டாம். மாற்ற வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, பின்னர், ஷிப்ட் + எப்3 கீயை அழுத்தினால், இந்த ஆப்ஷன்கள் வரிசையாகக் காட்டப்படும். தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.

14. பின் அப்: விண்டோஸ் 7 தொகுப்பில் எதனையும் டாஸ்க்பாரில் பின் செய்தி டலாம். அடிக்கடி பயன்படுத்தப் படும் போல்டர்கள், கண்ட்ரோல் பேனல், ஏன் ஒரு செயல்பாட்டிற்கென அமைக்கப் பட்ட பட்டனைக் கூட இதில் அமைத்திடலாம்.

15. ஆட் ஆன் நேரம்: உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு இயக்கத்திற்குக் கிடைக்க அதிக நேரம் ஆகிறதா? இதனுடன் இணைந்த ஆட் ஆன் தொகுப்பே இதற்குக் காரணம். Tools>Manage Addons  சென்று ‘Load time’  என்பதில் ஒவ்வொரு ஆட் ஆன் தொகுப்பிற்கான நேரம் பார்க்கலாம். பின்னர், அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் புரோகிராமினை, தேவை இல்லை என்றால் நீக்கிவிடலாம்.

(கண்டதை படைக்காமல், கண்டெடுத்ததை படைக்கிறேன்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: