கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் முகமூடியை கிழித்தெறிந்து அதன் நிஜமுகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய “விக்கிலீக்ஸ்” இணையதளத்தின் சேவையை முடக்கியுள்ளது அமெரிக்கா என்று டுவிட்டரில் விக்கிலீ்க்ஸ் இணையதளம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் : விக்கிலீக்ஸ். ஓஆர்ஜி, நேம், அசோசியேடட் பிரஸ் உள்ளிட்ட சேவைகளை வி்க்கிலீக்ஸ் டொமைன் நேம் சேவை வழங்கும் நிறுவனம் முடக்கிவிட்தாகவும், இந்த இணையதளம் தொடர்பாக பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த எதிர்ப்புக்களாலும், இந்த டொமைன், யுஎஸ் எவ்ரிடிஎன்எஸ்.நெட் என்ற இணைய தளத்தால் முடக்கப்பட்டிருப்பதாகவும், விக்கிலீக்ஸ், தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதாகவும், அதன் இணையதளத்தில் உண்மையை மட்டுமே வெளியிட்டதாகவும், இதனால் யாருக்கும் பயப்படப்போவதில்லை என்றும், மேலும் நன்கொடையாளர்களிடமிருந்து நிதி தாராளமாக வசூலித்து. விக்கிலீக்ஸ் தனது இந்த சேவையை தொடர விருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.