Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பேச்சு வார்த்தை தோல்வி: லாரி வேலை நிறுத்தம் உறுதி

லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக நேற்று டில்லியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சருடன், ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், திட்டமிட்டபடி நாளை நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கும்,” என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி தெரிவித்தார்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும். காலியாகச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு 25 சதவீதம் மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், நாளை நள்ளிரவு முதல் நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக டில்லியில், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் கமல்நாத் தலைமையில், ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், நாளை நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் துவங்குவது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி குறிப்பிடுகையில், “டில்லியில் நடந்த பேச்சு வார்த்தையில், தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக அமைக்கப்படும் சுங்கச்சாவடி மையங்களில் சுங்கக் கட்டணம் குறைப்பு செய்வது உள்ளிட்ட கோரிக்கை ஏற்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால், அதை மாற்ற இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது. அதில் எங்களுக்கு உடன்பாடு ஏற்படாததால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால், டிசம்பர் 5ம் தேதி(நாளை), நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் துவங்கும்’ என்றார்.

thanks dinamalar

***

இதன் தொடர்புடைய புதிய செய்தி

மேலும் இன்றைய இடுகைகள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: