வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், குறைந்த தாழ்வழுத்த மண்டலம் உருவாகி இருப்பதாலும் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை சேதம் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 8 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகள் தங்களுடைய ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்து வருகின்றனர். இது தொடர்பாக நாளை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தஞ்சாவூரில் மட்டும் 30 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.
தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்து இருக்கிறது. தமிழகத்தில் பெய்த மழைக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று முதல் தென் மாவட்டங்களில் லேசான வெயில் தலை காட்டத்து வங்கியிருக்கிறது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் முதல் சென்னையில் தொடர் மழை பெய்த காரணத்தினால் முக்கிய வீதிகள் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. வட சென்னையில் கடல் கொந்தளிப்பாக உள்ளது. அலையின் சீற்றம் காரணமாக எண்ணூர் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது.
கடல் அரிப்பை தடுக்க வைக்கப்பட்டிருந்த மணல் மூடைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. குடிசைப்பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது. கøயோர மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு சென்றனர். மணலி தரைப்பாலம் மூழ்கியது.வியாசர்பாடி, கணேசபுரம் பாலத்தில் துண்டிப்பு ஏற்பட்டது. வியாசர்பாடி சுரங்கப்பாலத்தில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் ரயில்போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. அடையாறில் உள்ள இசைக்கல்லூரியின் ஒரு பகுதி அறை இடிந்து விழுந்தது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.
- Puzhal
புழல் ஏரி திறப்பு: சென்னையில் பெரிய ஏரியான புழல் ஏரியில் தண்ணீர் நிரம்பியதை அடுத்து திறந்து விடப்பட்டது. 2 ஷெட்டர் திறக்கப்பட்டதாõல் 700 கன அடி நீர் வெளியேறும். கொற்றாலை ஆறு வழியாக செல்லும் வெள்ள நீர் வடகரை, கிராண்ட்லைன், வட பெரும் பள்ளம், மணலி, ஆமுல்லைவாய், காடன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இப்பகுதி மக்கள் மாற்று இடங்களுக்கு செல்ல அறிவுறத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர் மழை காரணமாக கடந்த 2008 ல் புழல் ஏரி திறக்கப்பட்டது.
(நாளேடு ஒன்றில்வெளியான செய்தி) / (படத்தொகுப்பு விதை2விருட்சம்)