ஐ.நா.,வில் உளவு பார்த்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் கூறியுள்ளார். இது தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கூறுகையில், ஐ.நா., அலுவலகத்தில் உளவு பார்க்க சொன்ன விவகாரம் மிகவும் முக்கியமானது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா சட்டத்தை மதிக்கும் நாடாக விளங்குமானால் அதன் அதிபர் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒபாமா விளக்க வேண்டும். இது குறித்து அவர் விளக்கமளிக்க மறுத்தாலோ, அல்லது உளவு பார்க்க அவர் ஒப்புதல் அளித்தாக ஆதாரங்கள் இருந்தாலோ அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
(நாளேடு ஒன்றில் வெளியான செய்தி)