Tuesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, ராஜாவை தி.மு.க.,வில் இருந்து நீக்க காங்கிரஸ் நெருக்கடி கொடுக்க வில்லை என்றும் ராஜா மீதான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டால், அவரை கட்சியில் இருந்து நீக்கவும் தயங்க மாட்டோம் என்றும் இதுவரை எந்தவிதமான குற்றச் சாட்டுக்களும் நிரூபிக்கப் படவில்லை என்றும் ராஜா நிரபராதி. ராஜா,  2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதுகுறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என்றும்  2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தினால், பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு தயார். சி.பி.ஐ., விசாரணையை முடித்து ராஜா குற்றவாளி என நிருபிக்கும் வரை அவர் குற்றமற்றவர். 2001ம் ஆண்டு முதல் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பின்பற்றப்பட்ட கொள்கைகள் என்ன என்பது பற்றி அறிய உச்சநீதிமன்றம்  கூறியுள்ளதை, வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply