Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமெரிக்காவுக்கான இந்திய தூதருக்கு அவமரியாதை‌ : விமானநிலையத்தில் சோதனை

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் ஜாக்சன் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சாதாரண பயணிகளைப் போல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4ம் தேதியன்று மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீராசங்கர். கருத்தரங்கை முடித்துக் ‌கொண்டு ஜாக்சன் எவர்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார் மீரா. பார்லிடிமோர் செல்வதற்காக காத்திருந்த அவரை அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சாதாரண பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் போல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தினர்.

விமானத்தில் செல்லும் சாதாரண பயணிகள் உடைகளுக்குள் ஏதாவது சந்தேகத்துக்கு இடமான பொருட்களை மறைத்து வைத்துள்ளனரா என கைகளால் தடவி பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும். மீராசங்கர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்தார். மீராசங்கர் அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது பதவி குறித்து விளக்கியும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வி.ஐ.பி., வெயிடிங் அறைக்கு அழைத்துச் சென்ற அவரை , பெண் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஜாக்சன் ரோவர்ஸ்

சர்வதேச விமான நிலையம்

சர்வதேச விமான நிலையத்தில் முழு உடம்பையும் ஸ்‌‌கேன் செய்யும் மிஷின்கள் இல்லாததால், மீரா இந்த மாதிரியான ‌சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  உயர் அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த இந்த சோதனை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சர்வதேச விமான நிலையம்

விளக்கம் கோரினார் கிருஷ்ணா: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து விளக்க மளிக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை

அமைச்சர் எஸ்எம். கிருஷ்ணா அமெரிக்க தூதரகத்திடம் கோரியுள்ளார். மீரா சங்கர் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

(நாளேடு ஒன்றில் வெளியான செய்தி)

படங்கள் தொகுப்பு- விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: