அயல்நாட்டு செய்தி நிறுவனங்களின் இணையதளங்களை சீன அரசு
தடை விதித்துள்ளது. சீனாவின் சுதந்திரத்திற்காக போராடி வரும் லியூஷியாவ்போ என்பருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியுள்ளது. இதற்கு சீனா கடுமையாக தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதினும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசை திரும்ப பெற போவதில்லை என்று நோபல் பரிசு வழங்கும் கமிட்டி தெரிவித்து விட்டதால், பரிசு வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. நோபல் பரிசு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சீன ஆதரவு நாடுகள் விழாவை புறக்கணித்தது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறது. நோபல் பரிசை போன்று அதற்கு இணையான மற்றொரு பரிசை தரப் போவதாக சீனா அதிரடியாக அறிவித்த அதே நேரம் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் நோபல் பரிசை வழங்கும் விழாவை ஒளிபரப்பு செய்வதை சீனாவில் தெரியாத வகையில் அதாவது இருட்டடிப்பு செய்ய இருப்பதற்காக அந்நிறுவனங்களின் வெப்சைட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இருப்பின்ம் நோபல் பரிசு வழங்கும் விழா கோலகலமாக நடக்கும் என்று நோபல் பரிசு வழங்கும் கமிட்டி தெரிவித்ததோடு நில்லாம் அதற்காக ஆயத்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.