Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய கிரகம் ஒன்று விண்வெளியில் இருப்பதை இந்திய அறிவியல் அறிஞர் கண்டுபிடிப்பு.

இந்தியாவை சேர்ந்த நிக்கி மதுசூதன் என்பவர், புதிய கிரகத்தினை  கண்டு பிடித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் படித்த இவர் தற்போது நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்சிடான் பல்கலையில் பணி புரிகிறார். இவர் தான் கண்டு பிடித்த கிரகத்திற்கு டபிள்யூ.ஏ, .எஸ்.பி .12பி (வைட் ஆங்கில் ஸ்பேஸ் பிளானெட்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும்,. 2300 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உடையதாகவும் இருக்கலாம் என‌ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது ஜூபிடர் கோளை காட்டிலும் அளவில் பெரியதாகவும், கார்பன் நிறைந்தும், இதர பிற‌ வாயுக்கள் நிறைந்தும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த கோள்கள் 2009-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் இங்கிலாந்து விண்வெளி மையமும் விரிவாக தொடர்ந்து ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply