Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி

இந்தியா – நியூசிலாந்து அணிகள் பங்கேற்று விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி

நியூசிலாந்தை வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த 5வது மற்றும் இறுதி போட்டியில் இந்திய அணியினர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தட்டிபறித்தது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடியது.  டெஸ்ட் தொடரை இழந்த நியூசிலாந்து அணியினர் ஒருநாள் போட்டியையாவது வெற்றிக்கனியை பறித்து விடலாம் என்று நினைத்தது. ஆனால், காம்பீரை கேப்டனாகக் கொண்ட இந்தியாவின் இளம் வீர்ர்கள் கொண்ட அணியிடம் நியூசிலாந்து ஈடு கொடுக்க முடியவில்லை.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்து முடிந்த‌ 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியினர், இந்திய அணியினரை பௌலிங் செய்ய வாய்ப்பளித்தது.  அந்த அணி, 27 ஆவது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து

புதிய தோற்றத்துடன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

வெறும் 103 சொற்ப ரன்களுக்கு எடுத்த்து. பின்பு இந்திய அணி தனது ஆட்டத்தை தொடர்ந்தது. 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கியது  இந்திய அணி, 21.1 ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் மட்டுமே தனது வெற்றி இலக்கான 107 ரன்களை எட்டியது.  இதன் மூலம் டெஸ்ட் போட்டியிலும் சரி  ஒருநாள் போட்டியிலும் சரி,  இந்தியாவை ஒரு போட்டியில்கூட வெற்றிக்கனியை சுவைக்காமல் நியூசிலாந்து அணியினர்  நாடு திரும்புகிறது.இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி உலக அளவில் அசைக்கமுடியாத அணியாக உருவெடுத்துள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: