இலங்கை ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப் பிரியாவின் உடலைக் காட்டும் புதிய விடியோவை சேனல்-4 வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலி களுடனான போரின் போது இலங்கை ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் தொடர்பான புதிய விடியோ சேனல்-4 தொலைக்காட்சியில் அண்மையில் வெளியானது. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சில ஆண்களை ராணுவ வீரர்கள் சுற்றி நின்று சுட்டுக் கொல்வது போன்ற காட்சியும், நிர்வாண நிலையில் சில பெண்களின் உடல்கள் கிடப்பது
போன்ற காட்சியும் அந்த விடியோவில் இடம் பெற்றிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழ்நெட் இணையதளத்தின் வன்னிப் பகுதி செய்தியாளராகப் பணியாற்றிய ஷோபா என்ற இசைப் பிரியாவின் (27) உடலும் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் அந்த விடியோவில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் புதிய விடியோ ஒன்றை சேனல் 4 வெளியிட்டது. அதில் இசைப் பிரியாவின் உடலை வேறு கோணத்தில் காட்டும் புகைப்படம் இடம்பெற்றது. இந்த விடியோவில் இசைப்பிரியாவின் தோழியும் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்தவருமான கல்பனாவின் பேட்டியும் உள்ளது. விடியோவில் இடம்பெற்றது இசைப்பிரியாவின் உடல்தான் என அவர் அடையாளம் காட்டியிருக்கிறார்.
செய்தி -தினமணி
தொகுப்பாளராக இசைப்பிரியா ஒளிவீச்சு நிகழ்ச்சியில் . . .