Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி

ஸ்பெக்ட்ரம் மோசடி சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தராததால் வருகிற டிசம்பர் 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக இன்று சரத் யாதவ் தெரிவித்தார்.
இது குறித்து சரத் யாதவ் கூறியதாவது:-
டிசம்பர் 22-ந்தேதி டெல்லியில் ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக மாபெரும் பேரணி நடத்தப் போகிறோம். இப்பேரணி தேசிய ஜனநாயக கூட்டணியின் பேரணியாக இல்லாமல், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் பேரணியாக இருக்கும் எனக் கூறினார்.
இடதுசாரிகள் பேரணியில் பங்கேற்பார்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு சரத் யாதவ் பதிலளிக்க மறுத்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தின் இறுதி நாளான டிசம்பர் 13-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்தி அனைத்து கட்சியினரிடமும் நாங்கள் பேசுவோம் என்றும், இடதுசாரிகள் இதில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்றும் சரத் யாதவ் தெரிவித்தார்.
நாளேடு ஒன்றில் வெளியான செய்தி
ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: