1969-ல் வெளிவந்த எம்.ஜி.ஆர்., நடித்து வெளிவந்த அடிமைப்பெண்-ஐ காண நெல்லை தியேட்டரில் ரசிகர்கள் அலைமோதி வருகிறது. ரசிகர்களின் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் 2 வாரத்திற்கும் மேலாக படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்காலத்தில் புதுப் படங்கள் வெளிவந்த ஓரிரு நாட்களிலே பெட்டிக்குள் சுருண்டு விடுகிறது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வெளியான எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படத்தை இக்காலத்தில் மறு வெளியிட்டாலும் சக்கைப்போடு போடுவதைப்பார்க்கும் போது திரை ரசிகர்கள் எம்.ஜி.ஆர்.மீது கொண்ட அன்பைக்காட்டுவதாகவும், அதேநேரத்தில் பழைய திரைப்படங்கள் சாகா வரம் கொண்டிருப்பதை இருப்பதை பறைசாற்றுகிறது