ஈபிள் கோபுரம் 1889 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 300 மீட்டர் உயரமுள்ள இதன் உச்சியைப் பார்க்க அந்த கோபுரத்தின் அடியிலிருந்து 200 மீட்டர் தூரம் தள்ளி நிற்கவேண்டும்.
இது 18 ஆயிரம் மிகப்பெரிய துண்டுகள் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கட்ட 300 தொழிலாளர்கள், தினந்தோறும் வேலை செய்தனர். இதற்கு வர்ணம் பூச 50 டன் பெயிண்ட் தேவைப்பட்டது.
இந்த கோபுரத்தை இமார்ல் நோக்கிய, மௌரிஸ் கோசலின் என்ற இரண்டு பொறியாளர்கள் உருவாக்கினர். இதனை கட்டி முடித்த நிறுவனம் ஈபிள்
எனவே இந்த கோபுரம் ஈபிள் டவர் என்று அழைக்கப்படுகிறது.
– சியாமளா வெங்கட்ராமன்,
உரத்த சிந்தனை மாத இதழில்