Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த சதி

வரும் பிப்ரவரி மாதம் துவங்கவிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மைதானத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி பெரும் சேதத்தை ஏற்படுத்த இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காமன்வெல்த் போட்டியில் முறையான பாதுகாப்பு காரணமாக அசம்பாவிதம் இல்லாமல் முடிந்தது. எனவே இதற்கு ஏற்பாடு செய்த பாதுகாப்பு முறையை பின்பற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, வங்கதேசம், இலங்கை என இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 19 ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 2 ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியாவில் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியாவில் மும்பை, ஆமதாபாத், பெங்களூரூ, கோல்கட்டா, நாக்பூர் , சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போட்டிகள் நடக்கும் மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சென்னையில் 3 போட்டிகள் நடக்கிறது. இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூஸிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் , இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டி நடக்கிறது. கிரிக்கெட் போட்டியில் குண்டு வெடிப்பு நடத்தினால் பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் என பயங்கரவாதிகள் முடிவு செய்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் இதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதனால் கிரிக்கெட் போட்டி நடக்கும் மாநில போலீஸ் அதிகாரிகள் உஷாராக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகள் முகாம் அமைக்க திட்டமிட்டிருந்தனர் என அமெரிக்க தூதரகம் அனுப்பிய செய்திக்குறிப்பை விக்கிலீக்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

டில்லி குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி ஷாஜத் அகம்மது என்பவனிடம் நடத்திய விசாரணையில் கான்பூர், இந்தூரில் தாக்குதல் நடத்திட திட்டம் தீட்டினோம் என்றும் கூறியுள்ளான்.இதற்கிடையில் மும்பையில் பாகிஸ்தான் உளவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவனது பெயர் சலீம் முஜ்வாலா என்றும் இவனிடம் இருந்து செல்போன்கள், கம்ப்யூட்டர் நுண்பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர் போலீசார். குஜராத் கடலோர பகுதியில் படகில் வந்த பாகிஸ்தான் நாட்டவர் 13 பேர் கைது செய்யப்பட்டு விசாரனை நடந்து வருகிறது. நாடு முழுவதும் பாதுகாப்பு கண்காணிப்பில் முழுக்கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு வட்டாரம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தி –  தினமலர்

ப‌டங்கள் தொகுப்பு –  விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: