Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை வனிதாவின் மகனை, வரும் 13ம் தேதி . . .

நடிகை வனிதாவின் மகனை, வரும் 13ம் தேதி ஆஜர்படுத்த போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா. இவரும் சினிமாவில் நடித்துள்ளார். நடிகர் ஆனந்த் என்ற ஆகாஷை, வனிதா திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து பெற்ற பின், ஆனந்தராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், வனிதா விஜயகுமார், ஆனந்தராஜன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கும், ஆகாஷûக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைபடுத்தப்பட்டேன். ஆகாஷ், அவரது குடும்பத்தினர் என்னை மோசமாக நடத்தினர். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரிக்கு ஒன்பது வயது. இரண்டாவதாக மகள் பிறந்தார்.நான் கர்ப்பமுற்றிருந்த போது கூட, என்னை மோசமாக நடத்தினர். சென்னை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தேன். ஆகாஷ் தரப்பில் யாரும் பதிலளிக்க வில்லை. எனவே, குடும்ப நல கோர்ட், விவாகரத்து வழங்கியது. அதை எதிர்த்து, ஆகாஷ் மனு தாக்கல் செய்தார். பெரியவர்கள் தலையிட்டதால், பரஸ்பர விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தோம்.

மூத்த மகன், ஆகாஷ் வசம் இருக்க நான் ஒப்புக் கொண்டேன். மகளை என் வசம் வைத்துக் கொண்டேன். என் மகனை ஒழுங்காக அவர்கள் கவனிக்கவில்லை. அவனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலை இருந்தது. ஆகாஷ் அவனது அருகில் இருப்பதில்லை.தன்னை அழைத்துச் சென்று கவனித்துக் கொள்ளுமாறு என் மகன் கெஞ்சினான். ஆகாஷிடம் தெரிவித்து விட்டு, அவனை ஐதராபாத் அழைத்துச் சென்றேன். பின், அங்குள்ள கோர்ட்டில்

விஜயகுமார் குடும்பம் (பழைய படம்)

என் வசம் குழந்தையை ஒப்படைக்க கேட்டேன். என் வசம் மகன் இருக்க ஆந்திர கோர்ட் உத்தரவிட்டது. அதற்கு, ஆகாஷ் ஒப்புக் கொண்டார். அதன்பின், மகன், மகள் இருவரும் என் வசம் தான் உள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு, ஆனந்தராஜனை திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த திருமணம் பற்றி ஆகாஷûக்கு தெரியும்.

குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டாமல், அன்புடன் ஆனந்தராஜன் நடந்து கொண்டார். ஆகாஷின் உதவி இல்லாமல், குழந்தைகளை நான் படிக்க வைத்தேன். என் பராமரிப்பில் தான் குழந்தைகள் இருந்தனர். குடும்பத்தில் மூத்த பேரன் என்பதால், என் மகன் மீது தந்தை விஜயகுமார், தாயார் மஞ்சுளா அதிக அன்புடன் இருந்தனர். என் பெற்றோரின் வாழ்க்கை முறை ஆரோக்கியமற்றதாக உள்ளதால், அவர்களது தாக்கம் என் மகனுக்கு வந்துவிடும் என உணர்ந்தேன். அவர்களின் மனம் போன போக்கு, நடத்தையால், என் குழந்தைப் பருவம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அது தெரிந்து தான், என் பெற்றோர் அடிமையான தீமைகளில் இருந்து, என் குழந்தைகளை பாதுகாக்க விரும்பினேன்.

ஆனந்தராஜனை “டாடி என எப்போதும் என் மகன் அழைப்பான். என் கணவரைப் பற்றி மூத்த மகனிடம் என் பெற்றோர் தவறாக கூறியுள்ளனர். பிஞ்சு வயதிலேயே அவனை என் பெற்றோர் குழப்பினர். தீபாவளிக்கு பின், என் குழந்தைகளை அழைத்து வருவதற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். பெற்றோர் மயக்க நிலையில் இருந்தனர். மகனை விட மறுத்தனர். அப்போது பிரச்னை ஏற்பட்டது.குழந்தை, கணவன் முன்னிலையில் என்னை தந்தை தாக்கினார். தாக்குதலில் இருந்து தப்பிக்க நான் முயற்சிக்கும் போது, எனது தந்தை வழுக்கினார். கையில் முறிவு ஏற்பட்டது. அருண் விஜயும் வயிற்றில் என்னை உதைத்தார். இதனால், வயிற்றில் போடப்பட்டிருந்த தையல் விட்டு போனது. எனக்கு ரத்தம் வழிந்தது. அருகில் உள்ள போலீஸ் நிலையம் சென்றேன். அவர்களின் உதவியுடன், எனது மகனை அழைத்துச் சென்றேன்.கடந்த 3ம் தேதி நாங்கள் ஓட்டலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினோம். வீட்டின் வெளியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. ஆகாஷ் மற்றும் நான்கு பேர் இருந்தனர்.

எங்கள் காரில் இருந்து நாங்கள் இறங்கிய உடன், எங்களை தாக்கி விட்டு, மகனை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார். சட்ட விரோதமாக அவனை ஆகாஷ் வைத்துள்ளார்.எழும்பூரில் உள்ள பள்ளியில் எனது மகன் படிக்கிறான். அவனை பள்ளிக்கு அனுப்ப வில்லை. தற்போது தேர்வு நடந்து வருகிறது. அதையும் அவன் எழுதவில்லை. இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகனை ஆகாஷ் கவனிப்பதில்லை. அவரை எனது பெற்றோர் தூண்டி விடுகின்றனர்.எனது மகனின் உடல்நிலை, பாதுகாப்பு பற்றி பயப்படுகிறேன். குடித்து விட்டு இரவு நேரத்தில் ஆகாஷ் வீட்டுக்கு வருவது வழக்கம். மோசமாக அவர் நடந்து கொள்வார். பெண்களுடன் அவருக்கு பழக்கம் உண்டு. இதனால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். ஆகாஷ் வசம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், எனது மகனுக்கு ஆபத்து தான்.எனவே, எனது மகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய, “டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. கோர்ட்டில் வனிதாவே ஆஜராகி வாதாடினார். வரும் 13ம் தேதி விஜய் ஸ்ரீஹரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த “டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

நன்றி –  தினமலர்
புகைப்படங்கள் தொகுப்பு விதை2விருட்சம்

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: