Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாகிஸ்தானில் ஆஸ்பத்திரியில் மனித குண்டு தாக்குதல்; 20 பேர் பலி 16 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் பெஷாவர் அருகேயுள்ள ஹான்கு மாவட்டத்தில் பாஸ்காலே என்ற இடத்தில் புதிதாக ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு கட்டிட பணியும் நடைபெறுகிறது. அதில் ஏராளமானவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தற்கொலை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த டிராக்டரை வேகமாக ஓட்டி வந்து கட்டிடத்தின் மீது மோதினர். இதனால் டமார் என்ற சத் தத்துடன் அது வெடித்து சிதறியது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கட்டிடம் இடிந்து சேதமடைந்தது. இச்சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர் பெண்கள். 3 பேர் போலீஸ்காரர்கள்.
இச்சம்பவத்தில் 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஹாங்கு மற்றும் பெஷாவரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த ஆஸ்பத்திரி ஷியா பிரிவு முஸ்லிம் அறக் கட்டளையினரால் நடத்தப்படுகிறது. அதன் அருகே அந்த பிரிவினரின் மசூதியும் உள்ளது. எனவே இங்கு தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹான்கு அருகேயுள்ள கோஹட் மார்க்கெட்டில் டீன்ஏஜ் தற்கொலை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு வசிரிஸ்தானில் மீராம்ஷா அருகேயுள்ள காதர் கெல் என்ற இடத்தில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அமெரிக்காவின் ஆளில்லா விமானம் அங்கு ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்கள்.

(மாலை நாளிதழ் ஒன்று வெளயிட்ட செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: