நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான நாள் முதல் பல்வேறு இன்னல்களை சந்தித்த நித்தியானந்தா சாமியார் வெளிநாடுகளில் இருந்த ஆசிரமங்கள் பல மூடப்பட்டு விட்டன என்றும் பல சீடர்கள் இவரிடம் இருந்து பிரிந்து சென்று விட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ஆபாச வீடியாவில் சிக்கிய நித்தியானந்தர் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டார். இவர் மீது மோசடி, ஏமாற்று, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து பிடாதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது குற்றப் பத்திரிகையில் சொல்லப்படாத விஷயங்கள் சிலவற்றை சி..ஐ.டி, அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே தீவு வாங்க திட்டம் : இவர் கூறிய விவரம் வருமாறு: பாபா ராம்தேவ் என்ற யோகா குரு ஸ்காட்லாந்துவில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு ஆசிரமம் துவக்கியுள்ளார். இதுபோல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு தீவுப்குதியை விலைக்கு வாங்கி அங்கு ஒரு சிறப்பான ஆசிரம் துவக்க திட்டமிட்டிருந்தார். இது தொடர்பான பணியில் ஈடுபட்ட நேரத்தில் ஆபாச வீடியோ வெளியாகியது. இதனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆனாலும் இவருக்கு அமெரிக்காவில் 4 இடங்களில் ஆசிரமங்கள் இருந்தன. மலேசியா, சிங்கப்பூர், பிரேசில், இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் 15 இடங்களில் இவருக்கு ஆசிரமம் இருந்திருக்கிறது. இதில் லாஸ் ஏஞ்சல்ஸ், பெங்களூரூ அருகே உள்ள பிடாதி என இந்த 2 ஆசிரமங்கள் மட்டும் ஒழுங்காக செயல்படுகிறது. ஏனைய பல்வேறு ஆசிரமங்கள் செயல் இழந்து விட்டன.
ஆசிரமத்திற்கு கொடையாக வழங்கப்பட்ட பணம் மற்றும் நிலங்களை திருப்பித்தருமாறு பலர் சட்டப்பூர்வமாக அணுகியுள்ளனர். பல்வேறு கணக்கு இவரது சீடர்களால் நடந்து வந்திருக்கிறது. வரவு செலவு வகையில் பல்வேறு கணக்குகள் இருந்தன.பல சீடர்கள் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இவ்வாறு பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
(தினமலர் நாளேடு வெளிட்ட செய்தி)
மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்