2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பாராளுமன்றத்தை பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கி வருவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாவின் மீதான பழைய குற்றச்சாட்டுகளை நினைவு கூர்ந்து பார்த்தால், தெஹல்கா விவகாரத்திலும், கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுள்ள நில மோசடி பிரச்னையிலும் பாரதீய ஜனதா மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதோடு,. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து சி.பி.ஐ., ஏற்கனவே விசாரித்து வருவதையும் சுட்டிக்காட்டி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, பாராளுமன்றக் கூட்டு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் முடக்கப்பட்டிருப்பதால், அடுத்த்து என்ன செய்யலாம் என்று கட்சிகள் கூடி ஆலோசித்து வருவதாக தகவல்களை தெரிவிக்கின்றன•