Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொடரும் அமெரிக்காவின் அவமதிப்பு: மேலும் ஒரு இந்திய தூதரக அதிகாரியை அவமதித்தது அமெரிக்கா

கடந்த சில நாட்களுக்குமுன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் அவர்களை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அவமித்தனர். இதோ மீண்டும் ஒரு இந்திய தூதரக அதிகாரியை அமெரிக்க விமான நிலையத்தில் அவமதித்துள்ளனர். ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி ஹர்தீப் பூரி அவர்க்ளை, அமெரிக்காவின் டெக்சாஸ் விமான நிலையத்தில் வைத்தே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அவமதிப்பு ஆளாக்கப்பட்டுள்ளார்.  அந்த அதிகாரியின் பெயர் ஹர்தீப் சீக்கியர். அவரது தலைப்பாகையை நீக்க வலியுறுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் அவரை இன்னலுக்கு உள்ளாக்கினர்.

அமெரிக்காவின் இத்தைய செயல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமதித்துள்ளது. இதை கண்டிக்கவும், இதுபோல் இனி வரும் காலத்தில் நடக்காதவாறு அமெரிக்காவை வலியுறுத்த வேண்டும். அதோடு இல்லாமல் இதே போல் அவமரியாதை செயல் தொடர்ந்தால், இந்தியா, அமெரிக்காவில் உள்ள இந்திய‌ தூதரை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மேலும் இதன் தொடர்புடைய செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: