Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்பெக்ட்ரம் குறித்த சி.பி.ஐ., அறிக்கை பிப்ரவரியில் வெளியாகும்: ஸ்ரீகுமார்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான அறிக்கையை சி.பி.ஐ., வரும் பிப்ரவரி மாதம் அளிக்கும் என, விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரில் மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் இது குறித்து கூறியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்க மத்திய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளது.

இந்த கமிஷன் அமைக்கப்பட்டதால், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் லைசென்ஸ் அளித்தது தொடர்பாக மட்டும் தான் சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் சி.பி.ஐ., தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கிறோம். அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தொடர்பாக பொதுமக்கள் புகார் கொடுக்க வசதியாக தகவல் மையங்களை விஜிலென்ஸ் கமிஷன் திறக்க உள்ளது. இவ்வாறு ஸ்ரீகுமார் கூறினார்.

பிரபல நிறுவனங்களின் தொடர்பு அதிகாரி நிரா ராடியாவும், தொழிலதிபர் ரத்தன் டாடாவும் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக பேசிய தொலைபேசி விவகாரம் வெளியானதற்கு ரத்தன் டாடா வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்த எச்.டி.எப்.சி., தலைவர் தீபக் பரேக் குறிப்பிடுகையில், ” நிரா ராடியா தொலைபேசியில் பேசிய விவரங்களை வெளியிடுவது நமது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். இது போன்று ரகசிய தகவல்கள் வெளியாவது நமது நாட்டின் நற்பெயரை கெடுப்பதோடு, வர்த்தகத்தையும் பாதிக்கும்’ என்றார்.

“அசோசெம்’ தலைவர் திலீப் மோடி குறிப்பிடுகையில், “2ஜி விவகாரம் தொலைத் தொடர்பு துறையின் மீது அழியாத வடுவை உண்டாக்கிவிட்டது. இதனால், இத்துறையில் முதலீடு செய்பவர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இதனால், முதலீடு பாதிக்கும்’ என்றார்.

(செய்தி: தினமலர்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: