Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்ணீருடன் காதல் சரண்யா . . . . பேட்டி

எங்கம்மா எப்ப பார்த்தாலும் பணம்… பணம்னு அலையுறாங்க… என்று இளம் நடிகை சரன்யா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மகள் என்றும் பாராமல் தன்னை தனது தந்தை குடிபோதையில் தாக்கினார் என்றும், தந்தையின் முதல் மனைவியின் மகன் அருண்விஜய் ஹீரோ போல பாய்ந்து வந்து அடித்தார் என்றும் நடிகை வனிதா குற்றம் சாட்டிய விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காதல் படத்தில் நாயகி சந்தியாவின் தோழியாக நடித்த சரண்யாவின் தாயார் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகள் காதலன் அல்லது மந்திரவாதியிடம் மாட்டிக் கொண்டாள் ; அவளை மீட்டுத் தாருங்கள் என கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த சரண்யா, நான் சினிமாவை மட்டும்தான் காதலிக்கிறேன்; இப்போது என்‌னுடைய பிரண்ட் வீட்டில் இருக்கிறேன் என்று உடனடி பதில் சொல்லி தாயை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்நிலையில் அம்மா – மகள் இடையே போலீஸில் புகார் செய்யும் அளவுக்கு என்னதான் நடந்தது என்ற கேள்விக்கு நடிகை சரண்யா பதில் அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், பணப் பிரச்னைதான் இதற்கு காரணம். நான் ஒரு படத்துக்கு நாலு லட்சம் சம்பளம் வாங்குனா, அதை அப்படியே வீட்ல கொடுக்க முடியாது. எனக்கென்று செலவுகள் இருக்கு. காஸ்ட்யூம் செலவே பல ஆயிரம் ஆகும். இது புரியாமல் எங்கம்மா அளவுக்கு மீறி ஆசைப்பட்டு பணம் கேட்டு தொந்தரவு செய்தால் யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும். சூட்டிங் இல்லாத நாளில், சம்பாதிச்ச பணத்தை வெச்சுத்தான் வசதியா இருக்கணும். எங்கம்மாவுக்கு இதெல்லாம் புரியல; பணம்… பணம்னு அலையுறாங்க, என்று கூறியிருக்கிறார்.

என்னமோ போங்க… கோடம்பாக்கத்தில் இது பெற்றோர் – மகள் பிரச்னை நடக்குற சீசன் போல இருக்கு! சின்னத்திரை சீரியல் மாதிரி இழு இழுன்னு இழுக்காம… சட்டு புட்டுனு ஒரு முடிவுக்கு வந்தா சரிதான்!

நாளேடு ஒன்றில் வெளியான செய்தி
புகைப்படங்கள் தொகுப்பு விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: