Friday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாராளுமன்றம் முடக்கத்துக்கு கா‌ங்கிரஸ் தான் காரணம் : அத்வானி

டில்லியில் நிருபர்கள் மத்தியில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, பாராளுமன்றம் முடக்கத்துக்கு காரணமே இந்த‌ காங்கிரஸ்தான் என்று காரசாரமாக கொடுத்துள்ள புகாரில், மேலும் கடந்த 9 ஆம் தேதி கூடிய கூட்டத்தொடர் முழு அளவில் நடைபெறவில்லை என்றும் சில நேரங்களில் பாராளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பது கூட நல்லது என அத்வானி கூறிய‌ நிலையில்,  அத்வானி இவ்வாறு கூறினார். கடந்த மாதம் 9ம் தேதி கூடிய பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் நேற்றுடன் முடிந்தது. ஒரு நாள் கூட கூட்டத்‌தொடர் முழுமையாக நடைபெறவில்‌லை. சில நேரங்களில் பாராளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பது கூட நல்லது என அத்வானி கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், எதிர்கட்சிகள் ஸ்பெக்‌ட்ரம் விவகாரம் குறித்து பாராளுமன்ற கூட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால் காங்கிரஸ் விவாதத்துக்கு மட்டுமே தயாராக இருந்தது. காங்கிரஸ் பிடிவாதத்தால் தான் அவை முடங்கியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் பல பரிமாணம் கொண்டது. எனவே தான் எதிர்கட்சிகள் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்தது.  2-ஜி மெகா ஊழல் குறித்து மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட பார்லி., யை முடக்குவது ஒன்றே ஆயுதமாக இருந்தது. எனவே தான் அதை கடைபிடித்தோம் என்றார்.

மேலும் 2ஜி ஸ்‌பெக்ட்ரம் விவகாரம் ஊழல் சார்ந்தது மட்டுமல்ல. கார்ப்பரேட் தரகர்கள் அரசை நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதும் அம்பலமாகி யுள்ளதாகவும், ஐ.மு., கூட்டணி அமைச்சரவையை நிர்ணயித்ததும் கார்ப்பரேட் தரகர்கள் தான் என்றும் இவற்றிற் கெல்லாம் காரணமே பிரதமர் மன்மோகன் சிங் தான், என்றும் பிரதமர் இதற்கு பதிலளித்தே தீர‌ வேண்டும் என்றறு கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன•

Leave a Reply