Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனித வெடிகுண்டு உள்பட 200 அல்குவைதா கைது டாப் லீடர்களும் பலி

அல்குவைதா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் 200 பேர் பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சவுதி அரேபியாவில் மட்டும் 149 பேர் அடங்குவர். அல்குவைதா டாப் லீடர்களும் அடங்குவர். இந்த கைது வேட்டை காரணமாக அல்குவைதா பலமிழந்து வருவதாக ஈராக் உள்துறை அமைச்சர் ஜவாத் அல் போலானி தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரத்தில் மட்டும் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். போலானி மேலும் கூறுகையில்; இந்த பயங்கரவாதிகளில் பலர் செல்போன் உரையாடலின்போது இடைமறித்து கேட்ட போது அல்குவøதா சதிச்செயல்கள் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பல தற்கொலை படை தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்றார். இதில் பலர் அந்த அமைப்பின் முக்கியப்புள்ளிகள் ஆவர். இதில் மனித வெடிகுண்டுகளும் அடங்குவர்.

ஏப்ரல் மாதத்தில் நடந்த ரெய்டில் இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களான அபு அயூப் அல்மசூரி, அபு ஓமர் அல் பாக்தாதி கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்களை ஆரஞ்ச் நிற பனியன் அணிந்தபடி பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்தி காட்டினார்.கொல்லப்பட்ட முக்கியப் புள்ளிகள் இடத்தில் மாற்று நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டனர் என அல்குவைதா தொடர்புடைய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கடந்த சில மாதங்களில் 149 அல்குவதாவினரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளது. ரஷ்யாவில் 8 பேரும், ஏமனில் 12 பேரும் ஸ்பெயினில் 7 பேரும் , கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஜெர்மனி பார்லி., மீது தாக்குதல் நடத்த அல்குவைதாவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் கோபமற்று ஜெர்மனி சமீபத்தில் பிரதமர் வருகையின் போது கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் பாகிஸ்தானுக்கும் தனது கண்டனத்தை தெரிவித்தது.

(செய்தி –  தினமலர்)

Leave a Reply