ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் கிருஷ்ணன் கோயில் ஒன்று விரைவிலேயே கட்டப்பட உள்ளது. இந்த கிருஷ்ணன் கோயில் இஸ்கான் அமைப்பு, இந்து அமைப்பு மற்றும் இந்திய அரசு உதவியோடு கட்டப்பட உள்ள இந்த கோவில் இந்தியாவில் உள்ள பழமையான கோயிலை போன்று கலை அம்சத்தோடும், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் கட்டப்பட உள்ளதாகவும். கோயிலில் கட்டப்படும் வளாகத்தில் இந்திய மருத்துவமான ஆயுர்வேதம், சமுதாய நிகழ்ச்சிகள், பக்தர்கள் தங்குவதற்குரிய வசதிகள் மற்றும் அரங்கங்கள் போன்றவை கட்டப்பட உள்ளதாகவும். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள வெர்ஸ்கினோ கிராமத்தில் இந்த கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் வரும் 2012ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி துவங்க உள்ளதாக நாளேடுகளில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.